5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு.. மீண்டும் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

Tamil Nadu Half Yearly Exam: கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை ஜனவரியில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியகி உள்ளது. அதேநேரத்தில் அரையாண்டு விடுமுறை வழக்கம்போல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Dec 2024 16:55 PM
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தவிர தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5ஆம் தேதி வரை பயிலும் மாணவர்களுக்கு  வரும் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

1 / 5
இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த நாட்களில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஃபெங்கல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

2 / 5
இந்த 3 மாவட்டங்களில் ஜனவரி 2ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் விடுமுறையில் மாற்றம் இருக்காது என்றும் திட்டமிட்டப்படி டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த சூழலில் மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் சில மாவட்டங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

3 / 5
அதாவது, நெல்லை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வு நடைபெறாத சூழல் ஏற்பட்டது.  இந்த நிலையில், மழை பாதிப்பால் அரையாண்டு தேர்வு நடைபெறாத பள்ளிகளுக்கு அந்த தேர்வை ஜனவரியில் நடத்தப்பட உள்ளததாக தகவல் வெளியாகி உள்ளது.  அதே நேரத்தில் அரையாண்டு விடுமுறை திட்டமிட்டு டிசம்பவர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

4 / 5
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஏற்கனவே ஃபெங்கல் புயலால் 3 மாவட்டங்களுக்கு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது  எந்தெந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதோ, அவற்றுக்கு ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும். அரையாண்டு விடுமுறையில் மாற்றம் இருக்காது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும்" என்று கூறுனார்.

5 / 5
Latest Stories