5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000.. உடனே அப்ளை பண்ணுங்க.. அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உயர்கல்விக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக படிக்கும்போதே அவர்கள் பொருளாதார ரீதியாக எந்த ஒரு பிரச்னையும் இன்றி படிப்பை தொடர பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Nov 2024 20:54 PM
தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உயர்கல்விக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக படிக்கும்போதே அவர்கள் பொருளாதார ரீதியாக எந்த ஒரு பிரச்னையும் இன்றி படிப்பை தொடர பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 கல்வி ஊக்கத்தொகை  வழங்கும் திறனாய்வு தேர்வு நடைபெறும் என்றும் அதற்கு விண்ணப்பிக்கலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 5
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ.10,000 (ஒரு மாதத்திற்கு ரூ.1000 என) வழங்கப்படும்.

2 / 5
தமிழ்நாடு அரசு 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். முதல் தாள் காலை 10.00மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரையிலும் நடைபெறும்.

3 / 5
திறனாய்வுத் தேர்தவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 30.11.2024 முதல் 09.12.2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 09.12.2024 -க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4 / 5
எனவே, மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதன் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 10ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5 / 5
Latest Stories