மாணவர்களே ரெடியா? அரையாண்டு தேர்வு எப்போது? இத்தனை நாட்கள் விடுமுறையா? - Tamil News | tamilnadu half yearly exam time table released exam starts from december 16th | TV9 Tamil

மாணவர்களே ரெடியா? அரையாண்டு தேர்வு எப்போது? இத்தனை நாட்கள் விடுமுறையா?

Updated On: 

23 Nov 2024 07:43 AM

Half Yearly Exams : தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிசம்பர் 16ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 / 5தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில்  காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25 கல்வியாண்டில் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடந்து முடிந்து அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு தேதி, அரையாண்டு விடுமுறை, பள்ளிகள் திறப்பு போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25 கல்வியாண்டில் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடந்து முடிந்து அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு தேதி, அரையாண்டு விடுமுறை, பள்ளிகள் திறப்பு போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

2 / 5

இதில் தேர்வு தேதி, அரையாண்டு விடுமுறை, பள்ளிகள் திறப்பு போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 2024-25 கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, 1 முதல் 12ஆம் வகுப்ப வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கு டிசம்பர் 23ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3 / 5

டிசம்பர் 23ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் முடிவடையும் நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும். அதன்பிறகு டிசம்பர் 3ஆம் தேதி மூன்றாம் பருவ வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4 / 5

இதன் மூலம் அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் அளிக்கப்படுகிறது. டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு என மொத்தம் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பாடவாரியாக தேர்வுகள் விவரங்கள் விரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி மாணவர்கள் தங்களது தேர்வுகளுக்கு தயாராகி கொள்ள வேண்டும்.

5 / 5

மேலும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில், அரையாண்டு தேர்வு முக்கியமானதாக உள்ளது. 2024 – 2025ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையும் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (Pictures Credit : Getty)

ஹிந்தியில் காஜல் அகர்வால் நடித்த முதல் படம் எது தெரியுமா?
மாளவிகாவிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?
குளிர்காலத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாமா?
பலாப்பழ கொட்டையில் இத்தனை நன்மைகளா?