Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா? - Tamil News | tamilnadu powercut november 18th Chennai Coimbatore karur and many other parts to face power outage | TV9 Tamil

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

Published: 

17 Nov 2024 13:37 PM

தமிழ்நாடு மின்தடை : பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 18) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

1 / 5பராமரிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 18) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை, கோவை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. எனவே, அதற்கு ஏற்றவாறு தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

2 / 5

சென்னையில் திருமுல்லைவாயல் பகுதியில் சப்த கிரி நகர், விஜயலட்சுமி நகர், ஷீலா நகர், வெல்டெக் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. தொண்டியார்பேட்டை பகுதியில் கும்மாளம்மன் கோயில், டிஎச் சாலை, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, விபி கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, மன்னப்பன் தெரு, நைனியப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

3 / 5

கோவை மாவட்டத்தில் பட்டணம், கம்பன் நகர், நொயல் நகர், பள்ளம்பாளையம், இபி அலுவலகம், கரவலி சாலை, காவேரி நகர், காமாட்சிபுரம், பாப்பம்பட்டி, ஷிபா நகர், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம், சத்தியநாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாகுடி, வல்லலாரி, அமரடக்கி, ஆவுடையார்கோயில், கொடிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

4 / 5

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி நகர பகுதி, பாரதி வீதி, காந்திபுரம், காங்கவார் தெரு, வாணியர் தெரு, சேவூர் ரோடு ஒரு பகுதி, கவி கிராமம், அர்ச்சலூர், சிவன்மலை, மேருதூர், குட்டப்பாளையம், நத்தக்காடையூர், உடுமலைப்பேட்டை, தாய்முடி, சின்கோனா, பன்னிமேடு, உருளிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், புதுக்கோட்டை, அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

5 / 5

கரூர் மாவட்டத்தில் பால்வார்பட்டி, மணவாடி, ஜெகதாபி, மூக்கனகுறிஞ்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, பாலம்பாள்புரம், ஐந்து வீதி, கருப்பாயி கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, அனுமந்தராயன் கோயில் தெரு, புதுத்தெரு, சந்தை, சுங்ககேட், காந்தி கிராமம், கத்தாலப்பட்டி, பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், பாகநத்தம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?
30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!