Tamilnadu Powercut: கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின் தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ.. - Tamil News | tamilnadu powercut november 2 saturday tanjore perambalur and many other parts to face power outage | TV9 Tamil

Tamilnadu Powercut: கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின் தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..

Updated On: 

22 Nov 2024 11:07 AM

Power cut Areas | பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 2) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  கன்னியாகுமரி, கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6ஒவ்வொரு

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 6

அந்த வகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 2) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  கன்னியாகுமரி, கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 / 6

பெரம்பலூரில் உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம், உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம், அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

4 / 6

தஞ்சாவூரில், திருப்புறம்பியம்,சுவாமிமலை, பேராவூரணி,பெருமகளூர்,திருச்சிற்றம்பலம், திருப்பனந்தாள், சோழபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் தடை செய்யப்படும். அதேபோல் மதுரையில், எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படும்.

5 / 6

விருதுநகர் மாவட்டத்தில், முடங்கியார் - அய்யனார் கோவில், மலையபுரம், ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை, சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், வளையப்பட்டி - குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவேந்திரன், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும்

6 / 6

கன்னியாகுமரி மாவட்டத்தில், வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம், உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!