ஃபெங்கல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல் கடந்த 30ஆம் தேதி மாலை மாமல்லபுரத்துககு - புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்தது.