அரையாண்டு தேர்வு தள்ளிப்போகிறதா? வெளியான முக்கிய தகவல்! - Tamil News | tamilnadu school half yearly exam 2025 likely postponed due to cyclone fengal impact | TV9 Tamil

அரையாண்டு தேர்வு தள்ளிப்போகிறதா? வெளியான முக்கிய தகவல்!

Updated On: 

04 Dec 2024 12:33 PM

Half Yearly Exam 2024 : ஃபெங்கல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்தது.

1 / 5ஃபெங்கல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல் கடந்த 30ஆம் தேதி மாலை மாமல்லபுரத்துககு - புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில்  அதி கனமழை பெய்தது.

ஃபெங்கல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல் கடந்த 30ஆம் தேதி மாலை மாமல்லபுரத்துககு - புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்தது.

2 / 5

புயல் கரையை கடந்தபோது கொட்டித் தீர்த்த கனமழையால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் 50 செ.மீ வரை மழை பொழிவு இருந்தது. இதனால் அந்த பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

3 / 5

இதற்கிடையில் அரையாண்டு தேர்வு வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை துவங்குகிறது. ஆனால், பல மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. தொடர் மழை விடுமுறையால் பாடத்திட்டத்தை முடிப்பதற்கும் போதிய கால அவகாசம் இல்லை. எனவே, தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

4 / 5

குறிப்பாக, புயலால் பாதிப்புக்குள்ளான திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வை ஒத்தி வைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

5 / 5

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் நிலைகுறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளோடு அமைச்சர் அன்பில் மகேஸ் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பாதிப்புள்ள பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார். இதில் துறை செயலர் சோ.மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்க கல்வித் துறை இயக்குநர் பூ.அ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?