Tamilnadu Weather Alert: மதுரையில் பதிவான 11 செ.மீ மழை.. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. - Tamil News | tamilnadu weather alert 26 oct 5 districts with heavy rainfall alert imd report in tamil | TV9 Tamil

Tamilnadu Weather Alert: மதுரையில் பதிவான 11 செ.மீ மழை.. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

Published: 

26 Oct 2024 13:26 PM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

1 / 6தமிழக

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

2 / 6

நாளை முதல் வரும் நவம்பர் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 / 6

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

4 / 6

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

5 / 6

கடந்த 24 மணி நேரத்தில், நாமக்கல் AWS (நாமக்கல்), சிட்டம்பட்டி (மதுரை) தலா 11, குளச்சல் (கன்னியாகுமரி), இடையப்பட்டி (மதுரை), உசிலம்பட்டி (மதுரை) தலா 9, சோழவந்தான் (மதுரை), குப்பணம்பட்டி (மதுரை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) தலா 8, கல்லந்திரி (மதுரை), தல்லாகுளம் (மதுரை), உப்பாறு அணை (திருப்பூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), நிலக்கோட்டை (சென்னை), அடையாமடை (கன்னியாகுமரி), மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), பெரியபட்டி (மதுரை) தலா 7 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

6 / 6

அதேபோல், ஆண்டிபட்டி (மதுரை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி) தலா 6, நாங்குனேரி (திருநெல்வேலி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), மேட்டுப்பட்டி (மதுரை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), இளையாங்குடி (சிவகங்கை), பெருந்துறை (ஈரோடு), கிளானிலை (புதுக்கோட்டை), இரணியல் (கன்னியாகுமரி) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

உடலில் வைட்டமின் பி12 அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?
காலை வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்கள்.. அற்புதமான பலன் கிடைக்கும்
வாசனை திரவியம் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா?
நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?