Tamilnadu Weather Alert: தீபாவளி அன்று தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன? - Tamil News | tamilnadu weather alert 29 oct various parts of tamilnadu to recieve rainfall for next 7 days | TV9 Tamil

Tamilnadu Weather Alert: தீபாவளி அன்று தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?

Published: 

29 Oct 2024 13:18 PM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

1 / 6தென்னிந்திய

தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2 / 6

வரும் 1 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

3 / 6

அதேபோல் நவம்பர் 2 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

4 / 6

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

5 / 6

அதனை தொடர்ந்து 31 ஆம் தேதி அதாவது தீபாவளி அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 / 6

கடந்த 24 மணி நேரத்தில், அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), கோவிலங்குளம் (விருதுநகர்) தலா 4, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 2, பெரியாறு (தேனி), மாஞ்சோலை (திருநெல்வேலி), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!
கிராமத்து லுக்கில் நடிகை அதிதி ஷங்கர்!
நடிகை ஷ்ரத்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!