Tamilnadu Weather Alert: கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவான 16 செ.மீ மழை.. இன்றும் கனமழை தொடரும்.. - Tamil News | tamilnadu weather alert 3 nov 2024 kanniyakumari district recorded 16 cm of rainfall | TV9 Tamil

Tamilnadu Weather Alert: கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவான 16 செ.மீ மழை.. இன்றும் கனமழை தொடரும்..

Published: 

03 Nov 2024 13:40 PM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

1 / 6தென்

தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2 / 6

நாளை மறுநாள் முதல் வரும் 9 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 / 6

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

4 / 6

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

5 / 6

தமிழக கடலோரப்பகுதிகளில், வரும் 7 ஆம் தேதி, வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் வங்கக்கடலில், நாளை மறுநாள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

6 / 6

கடந்த 24 மணி நேரத்தில், கொட்டாரம் (கன்னியாகுமரி) 16, கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 14, கன்னியாகுமரி (கன்னியாகுமரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி) தலா 13, சோத்துப்பாறை (தேனி), பர்லியார் (நீலகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 12, மைலாடி (கன்னியாகுமரி), குன்னூர் (நீலகிரி) தலா 11, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!