Tamilnadu Weather Alert: மழை அலர்ட்… இன்று பட்டாசு வெடிக்க முடியுமா? வானிலை மையம் கொடுத்த தகவல்! - Tamil News | tamilnadu weather alert 31st october heavy rainfall to be expected today in tirupur madurai erode and others districts imd report in tamil | TV9 Tamil

Tamilnadu Weather Alert: மழை அலர்ட்… இன்று பட்டாசு வெடிக்க முடியுமா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

Updated On: 

31 Oct 2024 06:38 AM

Today Weather: நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை களைக்கட்டியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இப்படியான சூழலில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

1 / 5நாடு

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை களைக்கட்டியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இப்படியான சூழலில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, இன்று தீபாவளி கொண்டாடப்படுவதால் மழை பெய்யுமா பெய்யதா என்று அனைவருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

2 / 5

நேற்று யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்த நிலையில், மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

3 / 5

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 / 5

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

5 / 5

வரும் 3ஆம் தேதி முதல் வரும் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் தீபாவளி தினமான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!