தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள்? - Tamil News | tamilnadu weather light rainfall to be expected for next 7 days in nilgris coimbatore and others districts | TV9 Tamil

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள்?

Updated On: 

04 Dec 2024 14:32 PM

Tamil Nadu Rains: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் இனி வரும் நாட்களில் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 / 5கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல்  டிசம்பர் 10ஆம் தேதி வரை  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய,   லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.   சென்னையில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

2 / 5

சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகாலையில் ஒருசில பகுதிகளில் சில நாட்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் சென்னையில் பணி பொழிவுதற்கான வாய்ப்புள்ளது.

3 / 5

மேலும், அரபிக்கடல் பகுதிகளில் லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் நாளை தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

4 / 5

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபெங்கல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கனமழை வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிவாரண நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

5 / 5

இதனால் இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரங்களை போன்று கனமழை பெய்யாது என்றும் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளில் மீட்பு பணிகளில் நடந்து வருகிறது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?