Tata Motors: இந்த கார் செம பாதுகாப்பு.. ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்ற டாடா‌ கர்வ் மாடல்கள்! - Tamil News | Tata Curvv and Curvv electric secure 5 star bncap rating details in tamil | TV9 Tamil

Tata Motors: இந்த கார் செம பாதுகாப்பு.. ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்ற டாடா‌ கர்வ் மாடல்கள்!

Published: 

18 Oct 2024 15:14 PM

Tata Curve & Curve EV: இந்தியாவில் பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ், தற்போது தனது புத்தம் புதிய கர்வ் மற்றும் கர்வ் EV கார்களின் உற்பத்தியில் தரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்டிங்கில் டாடாவின் இரண்டு புதிய கார்களும் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன.

1 / 55

5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கில் கர்வ் மற்றும் கர்வ் EV கார்களை அறிமுகம் செய்வதாக உறுதியளித்திருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், விபத்து ஏற்பட்டால் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய கார்களின் கிராஷ் டெஸ்ட் ரேட்டிங்கை தற்போது வெளியிட்டுள்ளது.

2 / 5

புதிய கர்வ் மற்றும் கர்வ் EV  பயணிகளின் பாதுகாப்பிற்காக 32 புள்ளிகளில் முறையே 29.50 மற்றும் 30.81 புள்ளிகளைப் பெற்றன, அதே நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட 49 புள்ளிகளில் 44.83 மற்றும் 43.66 புள்ளிகளைப் பெற்றன. இதனுடன், புதிய கார்கள் பல நிலையான பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகின்றன, அவை போட்டி கார்களை விட அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

3 / 5

பாதுகாப்பிற்காக, கர்வ் மற்றும் கர்வ் EV கார்களில் ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் கொண்ட ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. மேலும், உயர்நிலை மாடல்களுக்கு உயர் நிலை பாதுகாப்பு அம்சங்களுடன் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

4 / 5

இப்போது கர்வ் எலக்ட்ரிக் பதிப்பு ஐந்து முக்கிய வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. கர்வ் EV இன் ஆரம்ப மாடல் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 17.49 லட்சம். இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.21.99 லட்சம். வாடிக்கையாளர்கள் 45kVh மற்றும் 55kVh பேட்டரி ஆகிய இரண்டு பேக்குகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். இந்த மாடல் அதிகபட்சமாக 502 கிமீ மைலேஜை வழங்குகிறது, அதே நேரத்தில் டாப்-எண்ட் மாடல் அதிகபட்சமாக 585 கிமீ மைலேஜை ஒரு சார்ஜில் வழங்குகிறது.

5 / 5

மேலும், புதிய கர்வ் காரில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் செயல்திறன் பிரியர்களுக்காக 125 குதிரைத்திறன் கொண்ட 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆகியவை அடங்கும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 10 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!