இந்தியாவில் கிரிக்கெட் என்பது மக்களிடையே உயிர் மூச்சாகவே கலந்துவிட்டது. இதனால், இந்திய கிரிக்கெட் வீரர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்கின்றனர். இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.