5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rajinikanth Birthday : ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரீ ரிலீஸாகும் ‘தளபதி’ திரைப்படம்..!

Thalapathy Re-release: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பல திரைப்படங்களை முன்னணி கதாநாயகனாக வலம்வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்துவருகிறார். நாளை டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி ரீ ரிலீஸாக உள்ளது.

barath-murugan
Barath Murugan | Published: 11 Dec 2024 19:25 PM
தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மராத்தியக் குடும்பத்தில் 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பெங்களூரில் பிறந்தார். சிறுவயதிலிருந்து திரைப்படங்களின் மீது ஆர்வம் கொண்ட இவர் நாடகங்களில் சிறுவனாக நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய இவர் சென்னையில்  மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் தனது நடிப்பு படிப்பைப் படித்துள்ளார்.

1 / 5
திரைப்படங்களில் இவருக்கு இருக்கும் ஆர்வத்தைக் கவனித்த இயக்குநர்க் கே.பாலசந்திரன், தான் இயக்கிய "அபூர்வ ராகங்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக  அறிமுகமாக்கினார். இப்படத்தினை தொடர்ந்து இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.

2 / 5
இந்நிலையில் தமிழ் மக்களிடையே மிகப் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று, தற்போதுவரை மனதை மயக்கச்செய்யும் திரைப்படமாக அமைந்தது தளபதி. பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்  1991ம் ஆண்டு வெளியான இந்த தளபதி  திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன், ஷோபனா, மம்மூட்டி, பானுப்ரியா மற்றும் அரவிந்த்  சுவாமி எனப் பலரும் நடித்திருந்தனர்.

3 / 5
நட்பை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படமானது நாளை டிசம்பர் 12 2024ம் ஆண்டில் ரஜினியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ரிலீஸாக உள்ளது. 1991ல் வெளியாகி பெரும் வெற்றியினை பெற்ற இந்த திரைப்படம் நாளை மறு வெளியீடாகி ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்த நாள் பரிசாக அமைய உள்ளது.

4 / 5
இந்நிலையில் நடிகர் ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில், தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து நாளை ரஜினியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினியின் புதிய  படத்தினை பற்றிய சிறப்பு அறிவிப்பு வெளியாகும் என்று  தகவல்கள் வெளியாகி வருகிறது.

5 / 5
Latest Stories