Sabarimala: ஐயப்ப பக்தர்களுக்கு நற்செய்தி… தேவஸ்தானம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள்… - Tamil News | There will be no spot booking for kerala sabarimala Ayyappa devotees details in Tamil | TV9 Tamil

Sabarimala: ஐயப்ப பக்தர்களுக்கு நற்செய்தி… தேவஸ்தானம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள்…

Published: 

16 Oct 2024 13:18 PM

Good News for Ayyapa Devotees: கேரளாவில் இம்முறை சபரிமலை ஐயப்ப சுவாமி பூஜை நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் தரிசனம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. சென்ற ஆண்டு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சபரிமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 / 5கேரளாவில்

கேரளாவில் இம்முறை சபரிமலை ஐயப்ப சுவாமி மண்டல பூஜை நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பக்தர்களின் தரிசனம் தொடர்பாக திருவிதான்கூர் தேவஸ்தானம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் இந்த முறை ஸ்பாட் புக்கிங் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5

கடந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் மற்றும் ஆன்லைன் முன்பதிவு ஆகிய இரண்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தினமும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தார்கள். ஆனால் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வரிசைகள், தரிசன கவுண்டர்கள், போக்குவரத்து ஏற்பாடு செய்யவில்லை. இதன் விளைவாக 80000 முதல் 90000 பக்தர்கள் தரிசிக்க 20 மணி நேரம் ஆனது.

3 / 5

சென்ற ஆண்டு சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்த போதிலும் அவர்களால் ஐயப்பனை தரிசனம் செய்ய முடியவில்லை. அந்த நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஸ்பாட் புக்கிங்கை நிறுத்தி உள்ளதாக சபரிமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு சுமார் 48 மணி நேரம் கருணை நேரம் (Grace Time) வழங்கப்படும். சபரிமலைக்கு தாமதமாக சென்றால் இந்த கருணை நேரத்தை பயன்படுத்தி தரிசனத்திற்கு செல்லலாம்.

4 / 5

சபரிமலை கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தரிசன டிக்கெட்கள் மற்றும்‌ பிரசாதங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். ஐயப்பனை தரிசிக்க தினமும் 80,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.‌ ஐயப்ப பக்தர்களின் தரிசன நேரமும் நீடிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் தரிசன நேரம் அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மீண்டும் மதியம் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் தினமும் 17 மணி நேரம் ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.

5 / 5

ஐயப்ப சுவாமி மண்டல பூஜை டிசம்பர் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு கோயில் மூடப்படும். மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக கோயில் திறக்கப்படும். ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தியை‌ முன்னிட்டு மகர விளக்கு தரிசனம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி ஐயப்பன் படி பூஜை உடன் மகர விளக்கு சீசன் நிறைவடையும்.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!