Children Sleep: தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த உணவுப் பொருட்களை கொடுங்கள்… சமத்தாக தூங்குவார்கள்… - Tamil News | These are the foods children need to sleep comfortably details in Tamil | TV9 Tamil

Children Sleep: தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த உணவுப் பொருட்களை கொடுங்கள்… சமத்தாக தூங்குவார்கள்…

Published: 

17 Nov 2024 11:11 AM

Children Sleeping Kids: குழந்தைகள் நன்றாக தூங்கினால் தான் மிகவும் ஆரோக்கியமாக வளர்வார்கள். ஆனால் வளரும் குழந்தைகள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவதால் சரியான நேரங்களில் தூங்குவதில்லை. தூக்கமின்மையால் அவர்கள் பலவீனம் அடைவார்கள். எனவே இந்த உணவுப் பொருள்களை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் நன்றாக தூங்குவதற்கு உதவுகிறது.

1 / 5வீட்டில்

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே குதூகலமாக இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் என்றும் சலசலப்பு இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு பொருளும் எடுக்க வேண்டிய இடத்தில் இருக்காது.‌ எப்பொழுதும் விளையாடும் நோக்கிலேயே இருப்பதால் அவர்கள் சரியாக தூங்க அடம்பிடிப்பார்கள்.

2 / 5

குழந்தைகளுக்கு தூக்கமும் மிக முக்கியமானது. சரியான தூக்கம் இருந்தால்தான் குழந்தைகள்‌‌ ஆரோக்கியமாக வளருவார்கள். விளையாடிய பிறகு குழந்தைகள் நன்றாக தூங்க வேண்டும். ஆனால் அவர்கள் தூங்குவதற்கு அடம் பிடிப்பார்கள். இந்த உணவுப் பொருட்களை அவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் அவர்களுக்கு நல்ல தூக்கம் வரும்.

3 / 5

குழந்தைகளுக்கு வாழைப்பழம் சாப்பிட கொடுத்தால் அவர்கள் நன்றாக வாழைப்பழம் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இதில் உள்ள சத்துக்கள் உடல் வலிமையும் கொடுக்கின்றன. குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுத்தால் நன்றாக தூங்குவார்கள்.

4 / 5

தயிர், பால் போன்ற பால் பொருட்களை கொடுத்தாலும் நன்றாக தூங்குவார்கள். இவற்றில் செரோடோனின் என்ற அமிலம் உற்பத்தியாகிறது. இது தூக்கத்தை ஊக்குவிக்கும். இரவில் பால் கொடுத்தால் நல்ல தூக்கம் வரும்.

5 / 5

தானியங்கள், செர்ரி பழங்கள், பாதாம் ஆகியவற்றை உண்டால் அவர்களுக்கு நன்றாக தூங்க உதவுகிறது. இந்த உணவுகளை இரவில் அல்லது மதியம் தூங்குவதற்கு கொடுக்கலாம்.

தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?
30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!