தவறான உணவு பழக்கம்: வைட்டமின் டி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உடலின் எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஊட்டச்சத்துக்கள். கால்சியம் குறைபாடுள்ள உணவுகளை சாப்பிடாமல் இருந்தால், எலும்புகள் வலுவிழந்துவிடும். இதனால் சிறு வயதிலேயே மூட்டு வலி ஏற்படும். எனவே முட்டை, மீன், பால், மற்ற பால் பொருட்கள், தானியங்கள் போன்றவற்றை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், தசை வலிகளைத் தவிர்க்க, புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.