Diwali: தீபாவளி பட்டாசு வெடிப்பதில்லை.. இந்த கிராமத்தில் மட்டும் ஒரு ரூல்.. காரணம் என்ன? - Tamil News | these‌ villages in tamil nadu celebrate deepavali without firecrackers to protect migratory birds details in tamil | TV9 Tamil

Diwali: தீபாவளி பட்டாசு வெடிப்பதில்லை.. இந்த கிராமத்தில் மட்டும் ஒரு ரூல்.. காரணம் என்ன?

Published: 

24 Oct 2024 09:21 AM

Diwali without Crackers: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொண்டாடும் பண்டிகை தீபாவளி. அமாவாசை இருளைப் போக்க தீபாவளி நாளில் தீபங்கள் ஏற்றப்படும். பல்வேறு பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதில்லை.

1 / 5இந்தியா

இந்தியா முழுவதும் கோலாகலமாக எல்லா தரப்பு மக்களும் கொண்டாடி மகிழும் இந்த தீபாவளி பண்டிகையை தமிழ்நாட்டில் உள்ள இரு கிராம மக்கள் கொண்டாடுவதில்லை.தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லுக்குடிப்பட்டி மற்றும் வேட்டங்குடிப்பட்டி கிராம மக்கள் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதில்லை. இந்தியா முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இந்த கிராம மக்கள் மட்டும் ஏன் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில்லை என இந்த முடிவை எடுத்தார்கள்? என தெரிந்து கொள்வோம். முன்னேறி வரும் உலகில், இயற்கையைப் போற்றுவதற்கும், அதன் உயிரினங்களைப் பராமரிப்பதற்கும் மக்கள் அரிதாகவே நேரத்தைக் செலவிடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் கொல்லுக்குடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி என்ற சிறிய கிராமம் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது.

2 / 5

இந்த கிராமத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள வேட்டங்குடி சரணாலயத்திற்கு பல பத்தாண்டுகளாக புலம்பெயர் பறவைகள் வருகின்றன. சில பறவைகள் தங்கள் குஞ்சுகளை சில நாட்கள் அங்கே வைத்திருக்கின்றன. குறிப்பாக குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்து, ரஷ்யா, இந்தோனேசியா, இலங்கை போன்ற தொலைதூர இடங்களில் இருந்து சுமார் 15 ஆயிரம் பறவைகள் வேட்டங்குடி சரணாலயத்திற்கு இடம் பெயர்கின்றன. எனவே தங்கள் பகுதிக்கு புலம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காக பட்டாசுகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடக்கூடாது என்று அந்த கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டு பல ஆண்டுகளாக அங்கு சிறுவர்கள் கூட பட்டாசு வெடிப்பதில்லை.

3 / 5

வேட்டங்குடி, பெரிய கொல்லுக்குடி பட்டி மற்றும் சின்ன கொள்ளுக்குடி பட்டி ஆகிய இடங்களில் உள்ள பாசனத் தொட்டிகளில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக 200 வகையான புலம்பெயர் பறவைகளின் பாதுகாப்பாக இனப்பெருக்கம் செய்யும் இடமாக இந்த சரணாலயம் கருதப்படுகிறது.நாங்கள் பறவைகளை பல ஆண்டுகளாக பாதுகாப்பாக பார்த்து வருகிறோம். தீபாவளியின் போது நாங்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. எங்கள் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் பறவைகளை மனதில் வைத்து பட்டாசுகளை தவிர்த்து வருகிறார்கள் என்று கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

4 / 5

காரைக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் திருப்பத்தூரில் அமைந்துள்ள வேடங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு சாம்பல் ஹெரான்ஸ், டார்டர்ஸ், ஸ்பூன்பில்ஸ், ஒயிட் ஐபிஸ், ஏசியன் ஓபன் பில் ஸ்டோர்க்ஸ், நைட் ஹெரான்கள் மற்றும் பூர்வீக நிலப்பறவைகளான பெயிண்ட் நாரைகள், குட்டி கார்மோரண்ட்கள், பின்டைல் லிட்டில், லிட்டில் எக்ரெட்ஸ், ஈக்ரெட்ஸ், கவ் எக்ரெட்ஸ், காமன் டீல்ஸ், ஸ்பாட் பில் வாத்துகள் போன்ற பல பறவைகள் புலம் பெயர்ந்து‌ செல்கிறது

5 / 5

38 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பறவைகள் சரணாலயத்திற்கு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்கின்றன. மழை குறைவாக இருந்தால் இங்கு பறவையின் வரத்தும் குறைந்து விடும். இப்பொழுது இந்த பகுதியில் நிறைய குரங்குகளின்‌ எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பறவைகளின் முட்டையை குரங்கு உடைத்து விடுகிறது என்று அந்த கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!
சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!
கர்ப்ப காலத்தில் கால் வீங்க காரணம் இதுதான்
மண் இல்லாமல் வளரக்கூடிய 10 செடிகள்!