White Hair: இளம் வயதில் முடி நரை பிரச்சனையா..? இந்த குறைபாடு காரணம்! - Tamil News | This is the cause of white hair at a young age; health tips in tamil | TV9 Tamil

White Hair: இளம் வயதில் முடி நரை பிரச்சனையா..? இந்த குறைபாடு காரணம்!

Published: 

02 Dec 2024 23:53 PM

Young Age: 30 முதல் 35 வயதுக்குள் முடி வெள்ளையாக மாறுவது மட்டுமின்றி, சில சிறுவர்களுக்கு 10 - 12 வயது வரையிலான குழந்தைகளும் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். சிலர் இதை எளிதாக மரபணு பிரச்சனையை என்று கடந்து செல்கிறார்கள்.

1 / 5நவீன வாழ்க்கை முறையில் இளம் வயதிலேயே பலருக்கும் முடி நரைக்கும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தலைமுடிக்கு டை அடித்து சிலர் இந்த பிரச்சனையை சரி செய்ய பார்க்கிறார்கள். சிலரோ, வெள்ளை முடிதானே என்று பொறுத்து கொள்கிறார்கள். உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

நவீன வாழ்க்கை முறையில் இளம் வயதிலேயே பலருக்கும் முடி நரைக்கும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தலைமுடிக்கு டை அடித்து சிலர் இந்த பிரச்சனையை சரி செய்ய பார்க்கிறார்கள். சிலரோ, வெள்ளை முடிதானே என்று பொறுத்து கொள்கிறார்கள். உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

2 / 5

30 முதல் 35 வயதுக்குள் முடி வெள்ளையாக மாறுவது மட்டுமின்றி, சில சிறுவர்களுக்கு 10 - 12 வயது வரையிலான குழந்தைகளும் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். சிலர் இதை எளிதாக மரபணு பிரச்சனையை என்று கடந்து செல்கிறார்கள். ஆனால், உண்மையில், இது சத்துக்களின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது.

3 / 5

வைட்டமின் பி 12, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 9 ஆகியவற்றின் குறைபாடு சிறு வயதிலேயே முடி நரைக்க வழிவகுக்கும். மேலும், உடலில் வைட்டமின்கள் இல்லாதபோது முடி உதிர்வு பிரச்சனையும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

4 / 5

உடலில் பித்தத்தை அதிகமாக உற்பத்தி செய்பவர்களின் முடி இளம் வயதிலேயே வெள்ளையாகிவிடும். பித்தத்தின் அதிகப்படியான உற்பத்தி உடலில் மெலனின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. பின்னர் அது முடி நிறத்தை மாற்றி நரைக்க செய்கிறது.

5 / 5

வைட்டமின் பி12 மற்றும் பி9 குறைபாட்டைத் தடுக்க கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்ப்பது நல்லது. வைட்டமின் டி குறைபாட்டை போக்க பால், தயிர் மற்றும் முட்டைகளை உட்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம், உங்களது நரை முடி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..