5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Update : ஓடிடியில் இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.. மறக்காம பாருங்க!

This Week OTT Movie Update : தற்போது சமீபகாலத்தில் இணையதளங்களின் வளர்ச்சியால் மக்கள் பலரை ஈர்த்துவருகிறது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் 3லிருந்து 4வாரத்திற்கு உள்ளாக இணையத்தளங்களில் வெளியாகி விடுகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகி மக்கள் கவனத்தை ஈர்த்து வரும் தமிழ்த் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..!

barath-murugan
Barath Murugan | Published: 26 Oct 2024 21:46 PM
திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்புகளைப் பெறுகிறதோ அந்த அளவிற்குப் பிரபல இணையதளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் வரவேற்புகள் இருக்கின்றனர். வீட்டிலிருந்தே எந்தவித இடையூறும் இல்லாமல்  குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் எளிதாகப் பார்க்கும் வண்ணம் இந்த ஓடிடி திரைப்படங்கள் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பற்றிப் பார்க்கலாம்.

1 / 6
இந்த லிஸ்டில் முதலிடத்திலிருப்பது நடிகர் அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நடிப்பில் வெளியான மெய்யழகன். தமிழ் பிரபல இயக்குநர்  சி.பிரேம்குமார் இயக்கத்தில் சூர்யாவின் 2டி என்டேர்டைமென்ட் தயாரிப்பு நிறுவனத்தினால் உருவான இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ல் திரையரங்குகளில் வெளியாகியது. திரையரங்குகளில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளைப் பெற்றநிலையில் தற்போது நேற்று 25ம் தேதியில் பிரபல ஓடிடி நிறுவனமான  நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

2 / 6
அடுத்ததாக இருப்பது நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் எனப் பல திறமைகளை உடைய ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் திரைப்படம். கடந்த செப்டம்பர் 20ல் வெளியான இத்திரைப்படத்தில் ஆதி, நாசர், நட்டி நடராஜ் மற்றும் அனகா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி  கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது ஓடிடிலும் வெளியாகியுள்ளது. அரசியல் மற்றும் போர்கள் போன்ற கதைக்களத்தில் உருவான இப்படம் அமேசான் ப்ரைம் மற்றும் டெண்டகோட்டா போன்ற இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

3 / 6
தமிழ் சினிமாவில் பல குத்துப் பாடல்களுக்கு இசையமைப்பாளராக இருந்து பின் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹிட்லர். இயக்குநர் தானா  இயக்கத்தில் ரியா சுமன்,கவுதம் வாசுதேவன், சரண் ராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்புகளை பெற்றுவரும் நிலையில் தற்போது அமேசான் பிரேமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

4 / 6
தமிழ் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் முன்னணி நடிப்பில் உருவான திரைப்படம் கோழிப்பண்ணை செல்லத்துரை.  தமிழ்த் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பாவா செல்லத்துரை, ஐஸ்வர்யா தத்தா மற்றும் பிரகித்தா போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். செப்டம்பர் 16ல் வெளியான திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளைப்  பெற்று வந்த நிலையில் "சிம்ப்ளி சவுத்" என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மாறுபட்ட திரைக்கதையை உடைய இந்த திரைப்படத்தை மறக்காம பாருங்க.

5 / 6
கடைசியாக இருப்பது தமிழில் பேராண்மை திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை தன்ஷிகாவின் நடிப்பில் உருவான ஐந்தாம் வேதம். தமிழ் பிரபல தொடரான மர்ம தேசம் என்ற தொடரை இயக்கிய நாகா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மர்மம் மற்றும் அமானுஷ்யம் போன்ற கதைக்களத்தில் உருவான இப்படமானது ஜீ5 என்ற ஓடிடியில் வெளியாகியுள்ளது. புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை மிஸ் பண்ணாம கண்டிப்பாக பாருங்க.

6 / 6
Latest Stories