Tirupati Darshan: ஏஐ வசதியை கொண்டு வரும் திருப்பதி தேவஸ்தானம்.. இனி கூட்டமே இருக்காது! - Tamil News | Tirumala Tirupati devasthanam plans to integrate AI and custom developed software for hassle free darshan | TV9 Tamil

Tirupati Darshan: ஏஐ வசதியை கொண்டு வரும் திருப்பதி தேவஸ்தானம்.. இனி கூட்டமே இருக்காது!

Updated On: 

25 Nov 2024 21:39 PM

திருப்பதி கோயில்: திருப்பதி எழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் தரிசன நேரத்தை குறைக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக பக்தர்கள் நன்கொடை அளிக்க ஏதுவாக கோயில் வளாகத்தில் kiosk எனும் தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது.

1 / 5திருப்பதியில்

திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள்.இங்கு நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் மேற்கொள்வர்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு வரும் மக்கள் காணிக்கையாக ரொக்கம் மற்றும் தங்க ஆபரணங்களை வழங்குவார்கள்.

2 / 5

சர்வ தரிசனம், கல்யாண உத்சவம், 300 ரூபாய் டிக்கெட் தரிசனம், ஊஞ்சல் சேவை, விஐபி தரிசனம் என பிரித்து மக்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இங்கு விடுமுறை நாட்கள், விஷேச தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். குறிப்பாக திருப்பதில் புரட்டாசி மாதம் பிரம்மோற்ச விழாவும், மார்கழி மாதம் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவும் தனித்துவம் வாய்ந்தது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

3 / 5

திருப்பதி எழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் தரிசன நேரத்தை குறைக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதோடு இல்லாமல், பக்தர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் kiosk எனும் ஏஐ தொழில்நுட்பை தேவஸ்தானம் கொண்டு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த kiosk தொழில்நுட்பம் கோவில் நிகழ்ச்சிகள், தரிசன நேரம், லட்டுகள், நன்கொடை சேவைகள், போக்குவரத்து சேவைகள், தண்ணீர் விவரங்கள் பற்றிய தகவல்களை வழங்கும். இதன் மூலம் பக்தர்கள் தரிசனம் குறையலாம் என்று கூறப்படுகிறது

4 / 5

அந்த kiosk தொழில்நுட்பம் கோவில் நிகழ்ச்சிகள், தரிசன நேரம், லட்டுகள், நன்கொடைகள், போக்குவரத்து சேவைகள், தண்ணீர் விவரங்கள் பற்றிய தகவல்களை வழங்கும். இதன் மூலம் பக்தர்கள் தரிசன நேரம் குறையலாம் என்று கூறப்படுகிறது. பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், தங்குமிடத்தை முன்பதிவு செய்யவும், தங்கள் யாத்திரையை திட்டமிடவும் முடியும். இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் தரிசன நேரத்தைக் கணக்கிடுதல், தரிசன அட்டவணைகளை நிர்வகித்தல் மற்றும் தரிசன நேரத்தை குறைக்க முக்கியப் பங்கு வகிக்கும்.

5 / 5

இதில் முதற்கட்டமாக பக்தர்களை நன்கொடை அளிக்க ஏதுவாக கோயில் வளாகத்தில் kiosk எனும் தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் ரூ. 1 முதல் ரூ.99,999 வரை நன்கொடையாக செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த kiosk தொழில்நுட்பம் நிறுவப்பட்ட ஒரு வாரத்தில் ரூ.2 லட்சம் வரை நன்கொடை வந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் வரிசையில் காத்திருந்து நன்கொடை அளிக்க வேண்டியது சூழல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?