5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

D Gukesh: அப்படிப்போடு.. செஸ் சாம்பியன் குகேஷூக்கு ரூ.5 கோடி பரிசு – முதலமைச்சர் அறிவிப்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷூக்கு ரூ.11 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 2ஆம் இடம் பிடித்த சீன வீரர் டிங்க் லிரெனுக்கு ரூ.10.13 கோடி பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Dec 2024 13:40 PM
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷூக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

1 / 6
கடந்த நவம்பர் 25ஆம் தேதி  சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கியது. அங்குள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வேரியர் ஹோட்டலில் இந்த போட்டியானது நடைபெற்றது.

2 / 6
இதில் நடப்பு சாம்பியனாக இருந்த சீனாவைச் சேர்ந்த டின் லிரெனும், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷூம் களம் கண்டனர். இதில் 14வது சுற்றுக்கு முன்பு வரை இருவரும் தலா 6.5 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

3 / 6
வெற்றியாளரை தீர்மானிக்கும் 14வது சுற்று நேற்று நடைபெற்றது. ஆரம்பத்தில் இந்த சுற்று டிராவில் முடியும் என கணிக்கப்பட்ட நிலையில் 55வது நிமிடத்தில் டிம் லிரென் செய்த சிறிய பிழை டி.குகேஷூக்கு வெற்றியை தேடி தந்தது.

4 / 6
இந்த வெற்றியின் மூலம் 18 வயதான டி.குகேஷ்   இளம் வயது கொண்ட உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார்.மேலும் இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பின் செஸ் பட்டம் வெல்லும் 2வது நபர் என்ற சிறப்பைப் பெற்றார்.

5 / 6
வெற்றி பெற்ற டி.குகேஷூக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலக செஸ் சாம்பியனான குகேஷூக்கு ரூ.11 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6 / 6
Latest Stories