School Leave: தொடரும் கனமழை.. 20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கு தெரியுமா? - Tamil News | TN Weather Alert Schools colleges announced holiday for today in puducherry Nagapattinam Karaikal | TV9 Tamil

School Leave: தொடரும் கனமழை.. 20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கு தெரியுமா?

Updated On: 

12 Dec 2024 07:36 AM

Heavy Rain: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அநேக இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் நேற்று காலை தொடங்கி விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இன்றும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு   காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஆனது.

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஆனது.

2 / 6

இதனிடையே இது டிசம்பர் 10 ஆம் தேதியன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது, இது மேற்கு-வடமேற்கு திசையில் அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை – தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

3 / 6

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யால் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

4 / 6

இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் இன்று (டிசம்பர் 12) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், கரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தூத்துக்குடி,கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

5 / 6

இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 / 6

ஏற்கனவே ஃபெஞ்சால் புயல் காரணமாக டிசம்பர் முதல் வாரம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது அரையாண்டு , செமஸ்டர் தேர்வுகள் நடத்த மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் கல்வி நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!
இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!