5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு

TNPSC Group 4 Exam: குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான கலந்தாய்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தேசமாக தொடங்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவிதத்துள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Nov 2024 14:00 PM
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என நான்கு வகைகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை  15.88 பேர் தேர்வு எழுத நிலையில், அக்டோபர் 28ஆம் தேதி  தேர்வு முடிவுகள் வெளியாகின.

1 / 5
இந்த தேர்வின் மூலம் 9,491 இடங்கள் நிரப்பப்படுகின்றன.  குரூப் 4  தேர்வின் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அடுத்தாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி,  ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றுவது நவம்பர் 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் முடிந்த நிலையில், அடுத்த கட்ட அறிவிப்பு குறித்து வெளியாகி உள்ளது.

2 / 5
அதன்படி, குரூப் 4 கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 கலந்தாய்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. அதில், ஒருங்கிணைந்த  குடிமைப் பணிகள்  தேர்வு 4 பல்வேறு பதவிகளுக்கான கலந்தாய் எந்த வரிசையாக நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.

3 / 5
அந்த அறிவிப்பில், "இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணிகளுக்கும் உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனை வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) " என்று தெரிவித்துள்ளது.

4 / 5
பொதுவாக குரூப் 4 தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தனி உதவியாளர், ஓட்டுநர்,  தட்டச்சர் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்படும். தற்போது வனக் காப்பாளர், வனக் கண்காணிப்பாளர் ஆகிய பணிகளுக்கு மட்டுமே கலந்தாய்வு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது. மீதியுள்ள பணியிடங்களுக்கு விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, குரூப் 4 தேர்வர்கள் இதனை அறிந்த அதற்கு ஏற்றவாறு கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (pictures credit : Getty/PTI)

5 / 5
Latest Stories