5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave : தொடர் கனமழை.. தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

பள்ளிகளுக்கு விடுமுறை: தொடர் கனமழை காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  நேற்று இரவு முதல் தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Nov 2024 08:06 AM
தொடர் கனமழை காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,  நேற்று இரவு முதல் தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 / 5
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்க பருவமழை தொடங்கியது. தொடக்கம் முதலே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இயல்பை விட கூடுதலாக 12 சதவீதம் பெய்துள்ளது. இதன்பிறகு காலை வெயில், மாலையில் மழை என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

2 / 5
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா,  மேற்கு தொடர் மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, நேற்று முதல் தஞ்சை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதனால், அங்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3 / 5
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

4 / 5
அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.  அதேபோல, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, பட்டுக்கோட்டை,  சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

5 / 5
Latest Stories