School Leave : தொடர் கனமழை.. தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. - Tamil News | today holiday declared for schools in Thanjavur district due to heavy rainfall | TV9 Tamil

School Leave : தொடர் கனமழை.. தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

Updated On: 

18 Nov 2024 08:06 AM

பள்ளிகளுக்கு விடுமுறை: தொடர் கனமழை காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  நேற்று இரவு முதல் தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 / 5தொடர்

தொடர் கனமழை காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,  நேற்று இரவு முதல் தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்க பருவமழை தொடங்கியது. தொடக்கம் முதலே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இயல்பை விட கூடுதலாக 12 சதவீதம் பெய்துள்ளது. இதன்பிறகு காலை வெயில், மாலையில் மழை என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

3 / 5

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா, மேற்கு தொடர் மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, நேற்று முதல் தஞ்சை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4 / 5

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

5 / 5

அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, பட்டுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி