திக்.. திக்.. திகில்! ஓடிடியில் பார்க்க வேண்டிய 5 க்ரைம் த்ரில்லர் மூவிஸ்..! - Tamil News | Top 5 Crime Thriller Movie List In ott Tamil | TV9 Tamil

திக்.. திக்.. திகில்! ஓடிடியில் பார்க்க வேண்டிய 5 க்ரைம் த்ரில்லர் மூவிஸ்..!

Published: 

17 Oct 2024 19:13 PM

What to Watch : இப்போதெல்லாம் திரைப்படங்களை திரையரங்குகளில் சென்று பார்ப்பதைவிட மக்கள் அமேசான், நெட்பிளிக்ஸ் மற்றும் ஹட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களைப் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் ஓடிடி தளங்களில் இருக்கும் டாப் 5 க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

1 / 6பெரிய

பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரை திரையரங்குகளில் வெளியாகி பின் ஓடிடியிலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளையும் பெற்றுவரும் நிலையில் ஹாலிவுட் திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்ப்பதுண்டு. அந்த விதத்தில் ஓடிடி இணையத்தில் இருக்கும் கொலை நடுங்கவைக்கும் டாப் சைக்கோ த்ரில்லர் மற்றும் க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களைப் பார்க்கலாம்.

2 / 6

நம்ம லிஸ்டில் முதல் திரைப்படமாக இருப்பது ஏஞ்சல்ஸ் அண்ட டிமான்ஸ் 2009ல் வெளியான இந்த திரைப்படத்தை ஹாலிவுட் டான் பிரவுன் எழுத்தில், இயக்குநர் ரான் ஹெவர்ட் இயக்கத்தில் வெளியான க்ரைம் மற்றும் த்ரில்லர் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் கதையானது ஒரு தேவ ஆலயத்தில் மர்மமான முறையில் பாதிரியார்கள் கொல்லப்படுவதையும் மற்றும் அந்த ஆலயத்தின் கீழ் உள்ள அறையில் மர்மமான ஒரு புத்தகத்தை வைத்தும் இக்கதை தொடர்கிறது. இணையத்தில் 10க்கு 7.2 என்ற ரேட்டிங் கணக்கில் ஜீ5யில் உள்ளது.

3 / 6

அடுத்ததாக இருக்கும் திரைப்படம் தி ரெட் டிராகன். 2002ல் வெளியான இத்திரைப்படத்தை இயக்குநர் பிரட் ராட்னர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் உளவியல் ரீதியாக த்ரில்லர் திரைப்படமான இது மாந்திரிக முறையில் ரெட் டிராகன் என்ற தீயசக்தியை உலகிற்குக் கொண்டுவருவதற்காக ஒரு சைக்கோ மக்களை பலியிடும் அமானுஷ்ய கதைக்களத்தைக் கொண்டதாகும். இணையத்தில் 10க்கு 7 என்ற ரேட்டிங்கில் அமேசான் ப்ரைமில் உள்ளது.

4 / 6

லிஸ்டில் அடுத்ததாக இருக்கும் திரைப்படம் ஐடெண்டி (identity). 20023ல் வெளியான இத்திரைப்படத்தை ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கத்தில் வெளியான சைக்கோ த்ரில்லர் திரைப்படம் மோசமான மழைப் புயலின் போது பாழடைந்த நெவாடா மோட்டலில் சிக்கித் தவிக்கும் பத்து அந்நியர்கள் தாங்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுவதை உணரும்போது ஒருவருக்கொருவர் தங்களை காப்பாற்றும் எண்ணத்தில் எப்படி அதிலிருந்து தப்பித்தனர் என்ற கருவை மையமாகக் கொண்டு உருவாக்கிய திரைப்படமாகும். இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் இணையத்தில் இருக்கிறது.

5 / 6

நான்காவதாக இருக்கும் திரைப்படம் தி இன்விசிபிள் கெஸ்ட். 2016ல் இயக்குனர் ஓரியோல் பாலோ இயக்கத்தில் வெளியான ஸ்பானிஷ் மொழியில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படமாகும். ஒரு தொழிலதிபரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்களில் யாரோ ஒருவர் தொழிலதிபரை கொலை செய்திருப்பார் அவரை யார் கொலை செய்தார் என்ற கதையை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படமாகும். இணையத்தில் 10க்கு 7.4 என்ற ரேட்டிங்கில் அமேசான் பிரேமில் உள்ளது.

6 / 6

இந்த லிஸ்டில் கடைசியாக இருப்பது ஐ சா தி டெவில் (I SAW THE DEVIL) 2010ல் வெளியான கிம் ஜி வூண் இயக்கிய கொரியன் த்ரில்லர் திரைப்படமாகும். இந்த திரைப்படம் தன்னுடைய மனைவியைக் கொடூரமாகக் கொன்றவனைக் கணவன் தேடிக் கண்டுபிடித்துப் பழிவாங்குவதே மையமாகக் கொண்டு உருவாக்கிய க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். இணையத்தில் 10க்கு 7.8 என்ற ரேட்டிங் கணக்கில் ப்ரைம் வீடியோவில் உள்ளது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?