அதிவேக சார்ஜிங்.. செம லுக்.. சூப்பரான 5 ஸ்மார்ட்போன்கள்! - Tamil News | | TV9 Tamil

அதிவேக சார்ஜிங்.. செம லுக்.. சூப்பரான 5 ஸ்மார்ட்போன்கள்!

Published: 

27 May 2024 14:27 PM

Smartphones : செல்போன் என்பது மிக அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. பண பரிவர்த்தனை, வங்கி, பங்குச்சந்தை என செல்போன் என்பது நம் வணிகம் சார்ந்த பொருளாகவும் ஆகிவிட்டது. செல்போனில் மிக முக்கியமாக அனைவரும் கவனிப்பது என்னெவென்றால் சார்ஜ். ஒரு செல்போன் எவ்வளவு நேரம் சார்ஜ் நிற்கும் என்பது, எவ்வளவு வேகமாக சார்ஜ் ஏறும் என்பதும் மிக முக்கியம். அனைவரும் பிஸியான வாழ்க்கையில் இருப்பதால் அதிவேகத்தில் சார்ஜ் ஏறும் செல்போனைத்தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சார்ஜரின் வாட்ஸ் அதிகமாக இருந்தால் மிக வேகமாக செல்போனில் சார்ஜ் ஏறும். இப்போதெல்லாம் 120W வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அப்படியான லிஸ்டைத்தான் நாம் பார்க்க போகிறோம்.

1 / 5Redmi

Redmi Note 13 Pro+ : இந்த மாடல் போனுக்கு 120w ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5000 mAh பேட்டரி இருப்பதால் சார்ஜ் நீண்ட நேரத்துக்கு குறையாது. இந்த Redmi ஸ்மார்ட்போனை வெறும் 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்த போன் 8ஜிபி ரேம் சப்போர்ட்டில் கிடைக்கிறது. 256ஜிபி ரூ. 30,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் அமேசான் இந்த போனை ரூ. 3000 கேஷ்பேக் சலுகை. இந்த போன் ஆன்லைன் விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது

2 / 5

Motorola Edge 50 Pro : 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் 125 டபிள்யூ டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,999. கேஷ்பேக் மூலம் இந்த போனின் விலையை மேலும் குறைக்கலாம்.

3 / 5

IQOO Neo 9 Pro: IQ இன் அற்புதமான ஃபோன் 129 W வேகமான சார்ஜிங் அம்சத்துடன் கிடைக்கிறது. இதில் 5160 mAh பேட்டரி உள்ளது. 6.78 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கேமரா, பேட்டரி பேக்கப் என சிறந்த அம்சங்களை இந்த போனுக்கு அமேசான் தள்ளுபடியையும் கொடுக்கிறது

4 / 5

IQOO 12: இந்த மொபைல் 120W வேகமான சார்ஜிங் அம்சத்துடன் சந்தையில் கிடைக்கும் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்ட இந்த மாடல் அமேசானில் ரூ.52,999க்கு கிடைக்கிறது. வங்கிச் சலுகைகளிலும் தள்ளுபடியைப் பெறலாம். ஃபோன் 6.78 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது

5 / 5

iQOO Neo 7 Pro 5G: இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி உள்ளது. இது வேகமாக சார்ஜ் செய்வதற்கு 120 W ஃபிளாஷ் சார்ஜ் சப்போர்ட்டும் உள்ளது. இந்த போன் முழுமையாக சார்ஜ் ஆக 25 நிமிடங்கள் ஆகும். அமேசானில் ரூ30000க்குள் இந்த மாடலை பெறலாம்

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?