Deepavali: தீபாவளி பண்டிகை.. இந்த உடைகளை ட்ரை பண்ணுங்க! - Tamil News | Top traditional Indian dresses for men and women and children to wear this Diwali festival details in Tamil | TV9 Tamil

Deepavali: தீபாவளி பண்டிகை.. இந்த உடைகளை ட்ரை பண்ணுங்க!

Published: 

25 Oct 2024 09:06 AM

Diwali Dress: நவராத்திரி பண்டிகை முடிந்து தீபாவளிக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. தீபங்களின் திருநாளான தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பண்டிகையன்று பாரம்பரிய உடைகள் அணிந்தால், பண்டிகையின் மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

1 / 5சேலை: இந்தியப்

சேலை: இந்தியப் பெண்களின் விருப்பமானது சேலை. எந்த ஒரு பண்டிகை அல்லது சுப நிகழ்ச்சிக்கும் சேலை தான் முதல் தேர்வு. தீபாவளி பண்டிகைக்கு நீங்கள் பாரம்பரியமாக உடை அணிய விரும்பினால், பட்டுப் புடவை உட்பட பல்வேறு வகையான புடவைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். அதற்கு ஏற்ற நகைகளை அணிந்தால், திருவிழாவிற்கு சரியான தோற்றம் கிடைக்கும்.

2 / 5

லெஹங்கா சோளி : எல்லா பெண்களும் விரும்பி வாங்கும் ஆடைகளில் லெஹங்கா சோளியும் ஒன்று. எம்பிராய்டரி மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய லெஹங்கா சோளிகள் கிடைக்கின்றன, இந்த தீபாவளி பண்டிகைக்கு இந்த பாரம்பரிய தோற்றத்தை அணிந்து நீங்கள் ஜொலிக்கலாம்.

3 / 5

அணார்களி: பண்டிகைக்கு எளிமையாக இருக்க விரும்புபவர்கள் அர்ணகாளியை தேர்வு செய்யலாம். அனைத்து உடல் வகைகளுக்கும் ஏற்ற உடை, இந்த வகை ஆடைகள் பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும்.

4 / 5

சுடிதார்: சுடிதார் என்பது அனைவருக்கும் ஏற்ற ஆடைகளில் ஒன்று. பிரமாண்ட தோற்றத்துடன் கூடிய சுடிதார் பண்டிகைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறது. சுடிதார்களின் பல்வேறு வடிவமைப்புகள் ஏற்கனவே உள்ளன, எனவே உங்களுக்கு ஏற்ற வண்ண உடையை தேர்வு செய்யவும்.

5 / 5

அதேபோல் ஆண்களும் குழந்தைகளும் குர்தா சல்வார், முழு கை சட்டைக்கு மேல் ஜாக்கெட், ஷெர்வானி, வேட்டி ஆகிய உடைகளை அணிந்து இந்த தீபாவளி அமர்க்களப் படுத்தலாம்

பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!
குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பு அதிகரிக்க டிப்ஸ்!
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?
தண்ணீர் குடிக்க வேண்டிய 5 முக்கியமான தருணங்கள்..!