5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Traffic Diversion: மெட்ரோ பணிகள்.. சென்னை தி.நகரில் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Chennai Metro Works: சென்னையில் தொடர்ச்சியாக மெட்ரோ பணிகள் இரவு, பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பலரும் கேட்டுகொண்டுள்ளனர்.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Nov 2024 06:59 AM
சென்னையின் மிக முக்கியமான போக்குவரத்து சாதனமாக மெட்ரோ ரயில்கள் திகழ்ந்து வருகிறது. தற்போது பல வழிகளிலும் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 / 6
அந்த வகையில் சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தியாகராய நகர் பனகல் பார்க் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலையம் உள்ளே மற்றும் வெளியேறும் பகுதிகளுக்கான பணிகளைமேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

2 / 6
அதற்காக பனகல் பார்க் பகுதியில் வெங்கட் நாராயண சாலை, சிவஞானம் தெரு சந்திப்பு மற்றும் ஜேஒய்எம் கல்யாண மண்டபம் அருகில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இதன் காரணமாக நவம்பர் 23 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை 7 நாட்கள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மற்றும் செய்யப்பட உள்ளது.

3 / 6
அதன்படி தியாகராய நகரில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கட்நாராயண சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக சென்று வெங்கட் நாராயண சாலையை அடைந்து வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடையலாம்.

4 / 6
இதேபோல் உள்ளூர் மக்களின் வசதிக்காக வாகனங்கள் தியாகராயர் நகரிலிருந்து சிவஞானம் தெரு வழியாக ஜேஒய்எம் கல்யாண மண்டபம் வரை சாலையின் இரு திசைகளிலும் செல்ல வாகன ஓட்டிகள்  அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 / 6
இந்த மெட்ரோ ரயில் பாதையானது பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஐயப்பன் தாங்கல்,போரூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், பனகல் பார்க், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 / 6
Latest Stories