5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tourist Spots: இந்தியாவில் உள்ள ஏரிகளின் நகரங்கள் எது என்று தெரியுமா?

City of Lakes: இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரம் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்க்கிறது. இந்தியா இயற்கை அழகு நிறைந்த இடம். இங்கு பல வரலாற்று இடங்களும் உள்ளன. பல இடங்களின் அழகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. நமது நாட்டில் 'ஏரிகளின் நகரம்' என்று அழைக்கப்படும் நகரங்களும் உள்ளன. இந்த இடங்களுக்குச் செல்வது ஒரு இனிமையான உணர்வைத் தரும். அழகான ஏரிகளைக் கொண்ட நகரங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 06 Nov 2024 19:42 PM
நைனிடால்: நம் நாட்டில் ஏரிகளின் நகரம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நைனிடால். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடாலில் ஏழு பெரிய ஏரிகள் உள்ளன. மிகப்பெரிய ஏரி பீம்டல் ஆகும். மேலும், நௌகுசியாதல், லோகம் தால், ஹரிஷ்டால், நளதமயந்தி தால், மால்வா தாலு, பூர்ணா தால் போன்ற ஏரிகளும் உள்ளன. இந்த இடத்தின் அழகு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.

1 / 5
உதய்பூர்: ராஜஸ்தான் அதன் வரலாற்று கோட்டைகளுக்கு பெயர் பெற்றது. ஆனால் உதய்பூர் நகரம் 'ஏரிகளின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மிகவும் பிரபலமான ஏரி பிச்சோலா ஏரி ஆகும், இது உலகம் முழுவதும் பிரபலமானது. மேலும் உதய்பூரில் சாகர் ஏரி, ஃபதேசாகர் ஏரி, தூத் தலை ஏரி போன்றவை உள்ளன.

2 / 5
இந்தியாவின் சொர்க்கம் எனப்படுவது காஷ்மீர். இந்த நகரத்தின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஸ்ரீநகர் ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. தால் ஏரி பற்றி பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஏரியில் படகு சவாரி செய்ய பலரும் ஆசைப்படுவதுண்டு. அதைத் தாண்டி இங்கு நிஜின் எரியும் உள்ளது. இந்த ஏரி மிக அழகாக இருக்கும். தால் ஏரியுடன் ஒப்பிடும்போது இந்த ஏரியில் சுற்றுலா பயணிகளின் வரவு குறைவாக இருக்கும்.

3 / 5
மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் பல அழகிய ஏரிகள் உள்ளன. இது ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மோதியா தலாப், முன்ஷி ஹுசைன் கான் ஏரி, சோட்டா தலாப், படா தலாப், மேல் ஏரி, கீழ் ஏரி, ஷாபுரா ஏரி, போஜ்தால் போன்றவை உள்ளன. மேலும், போபாலில் உள்ள பிம்பேட்கா குகைகள், வான் விஹார் தேசிய பூங்கா, சாஞ்சி ஸ்தூபா, ராணி கமலாபதி அரண்மனை போன்ற இடங்களுக்குச் செல்லலாம்

4 / 5
ஷில்லாங்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் அமைந்துள்ள ஷில்லாங்கின் அழகு பார்க்கத் தக்கது. இது ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி உள்ளது. இது உமியம் ஏரி என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி சாகச ஆர்வலர்களுக்கும் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. மேலும் அனைத்து பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட ஏரி உள்ளது. கின்ரெம் நீர்வீழ்ச்சி, டெயின்ட்லென் நீர்வீழ்ச்சி தவிர பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன, இந்த நகரத்தின் அழகு யாரையும் பிரமிக்க வைக்கும். மேலும், ஷில்லாங் சிகரத்தின் வருகை வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

5 / 5
Latest Stories