Tourism: இந்த ஏரியாக்கள் டூர் போறீங்களா? அனுமதி வாங்கணும்.. முழு விவரம்! - Tamil News | Travel India the states of India where Indians also require inner line permit for entry details in Tamil | TV9 Tamil

Tourism: இந்த ஏரியாக்கள் டூர் போறீங்களா? அனுமதி வாங்கணும்.. முழு விவரம்!

Published: 

01 Nov 2024 09:28 AM

Inner Line Permit: இந்தியாவிலிருந்து வேறு எந்த நாட்டிற்கும் வேலையாகவோ அல்லது சுற்றுலா செல்ல திட்டமிட்டாலோ அதற்கு அதிகாரப்பூர்வ விதிகளின்படி விசாவை பெற வேண்டும். சில நாடுகளுக்குச் செல்ல மட்டும் இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை.‌ ஆனால் இந்தியராக இருந்தாலும் நம் நாட்டில் உள்ள சில இடங்களுக்கு செல்ல இன்னர் லைன் பெர்மிட் (அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ பயண ஆவணம்) கண்டிப்பாக வேண்டும்.‌ இந்த மாநிலங்களின் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பிறகு உள்ளூர் நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.

1 / 7இந்தியாவில்

இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. பாதுகாப்பு காரணங்கள் கருதி சில பகுதிகளில் வெளிநாட்டினர் மட்டுமின்றி இந்தியர்களும் நுழைய அனுமதி தேவைப்படுகிறது. இந்த மாநிலங்களில் சில சர்வதேச எல்லைகளால் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில மாநிலங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை பாதுகாக்க இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனவே இந்தியர்கள் கூட அனுமதி எடுக்க வேண்டிய மாநிலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

2 / 7

அருணாச்சல் பிரதேசம்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் அதன் இயற்கை அழகுக்காக கவரப்படுகிறது. ஆனால் நீங்கள் இங்கு பயணம் செய்ய திட்டமிட்டால் நீங்கள் ஒரு இந்தியராக இருந்தாலும் உங்களுக்கு இன்னர் லைன் அனுமதி தேவை. மலைகள், அழகிய பசுமையான பள்ளத்தாக்குகள், ஏரிகள், புத்த கோவில்கள் போன்ற இடங்களில் இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. மேலும் இங்கு பார்க்க நிறைய சுற்றுலா தளங்கள் இருக்கிறது. இங்கு நூற்றுக்கணக்கான பறவை இனங்களை பார்க்கலாம். மேலும் மூன்று புலிகள் சரணாலயங்களில் நீங்கள் சஃபாரியை அனுபவிக்க முடியும்.

3 / 7

நாகலாந்து: இந்தியாவில் உள்ள நாகலாந்து மாநிலத்திற்கு வெளிநாட்டினர் மட்டுமின்றி இந்தியர்கள் செல்லவும் அனுமதி தேவைப்படுகிறது. இங்கு பல பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இம்மாநிலத்தில் வளமான மொழி மரபையும் காணலாம். புவியியல் ரீதியாகவும் இந்த இடம் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது.

4 / 7

மிசோரம்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் நீல மலைகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிக அழகான இடமாகும். இங்கு ஒரு பயணத்தை திட்டமிடுவது ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது. ஆனால் இங்கு இந்த பகுதியை பார்வையிட இந்தியர்களுக்கு கூட அனுமதி தேவை. இங்குள்ள இயற்கை அழகு மட்டுமின்றி கலாச்சாரமும் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது.

5 / 7

லடாக்: இந்திய யூனியன் பிரதேசமான லடாக்கின் மலைப்பாதைகள், ஆறுகள், ஏரிகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் புத்த விகாரங்கள் போன்றவை உள்நாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. இங்கு கட்டப்பட்டுள்ள சாய்வான மர வீடுகளும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். தற்போது இங்கு செல்ல அனுமதி தேவை.

6 / 7

சிக்கிம்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் இந்தியாவின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்றாகும். இங்கு செல்ல அனுமதி தேவைப்படுகிறது. உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன்ஜங்கா இங்கு உள்ளது. மலையற்றம் மற்றும் பாரா கிளைடிங் போன்ற உற்சாகமான செயல்களை இங்கு செய்யலாம்.

7 / 7

லட்சத்தீவுகள்: இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு செல்லவும் அனுமதி தேவை.‌ நீலக்கடல், வெள்ளை மணல் மற்றும் பசுமையான இயற்கை அழகைத் தவிர இந்த இடம் அதன் தனித்துவமான உணவு சுவைகளுக்கு பிரபலமானது. லட்சத்தீவுகளிலும் நீர் விளையாட்டுகளை அனுபவிக்கலாம்.

ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் தேங்காய் பால்..!
வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் பயோ டேட்டா.. சினிமா லைஃப்!
நடிகை ஸ்ருதி ஹாசனின் நியூ ஆல்பம்..!