TV9 Festival Of India: TV9 நடத்தும் துர்கா பூஜை.. பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்! - Tamil News | TV9 Festival Of India in Delhi beautiful images of Durga Puja details in tamil | TV9 Tamil

TV9 Festival Of India: TV9 நடத்தும் துர்கா பூஜை.. பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்!

Published: 

10 Oct 2024 21:33 PM

TV9 Festival of India: டெல்லி மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் TV9 நடத்தும் இந்தியாவின் திருவிழா அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்தி திருவிழா 13 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் மிக உயரமான துர்கா சிலை, இசைக் கச்சேரி, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது.

1 / 8TV9

TV9 நடத்தும் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா என்னும் துர்கா பூஜை கொண்டாட்டம் இந்தியாவின் கலாச்சாரம், பக்தி மற்றும் மகிழ்ச்சியை உள்ளடக்கிய ஒட்டுமொத்த கொண்டாட்டமாக திகழ்கிறது.இந்தத் திருவிழாவிற்கு பல நாடுகளில் இருந்து 250 க்கும் ‌ மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் மற்றும் மறக்க முடியாத பொழுதுபோக்கு தருணங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கிறது.

2 / 8

திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான துர்கா சிலை பார்ப்போரை பிரமிக்க செய்கிறது. பக்தி மற்றும் கலைத்திறனுடன் இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வகை வகையான சிற்பங்கள், வசீகரிக்கும் அலங்காரங்கள் மற்றும் பக்தி இசை ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.

3 / 8

பிரம்மாண்டமான பந்தல்கள் முதல் கலகலப்பான கர்பா வரை ஒவ்வொரு மூலையிலும் TV9 இன் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியாவின் உற்சாகம் மற்றும் வசீகரம் நிரம்பியுள்ளது. இங்கு பூஜை சார்ந்த கொண்டாட்டங்களாக மட்டும் இல்லாமல் பார்வையாளர்கள் ஷாப்பிங் செய்தும் மகிழ்கிறார்கள். வாழ்க்கை முறை, ஃபேஷன், அழகு சாதன பொருட்கள் போன்ற பல்வேறு பொருள்களை இங்கு பார்த்து மகிழ்வதுடன் வாங்கியும் செல்கிறார்கள்.

4 / 8

இந்த ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்றது. உற்சாகமாக தொடங்கிய இந்த திருவிழா அக்டோபர் 13 வரை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பிரபலமான இந்த நிகழ்ச்சியில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவிற்கு பல நாடுகளில் இருந்து 250 க்கும் ‌ மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

5 / 8

நடனம், இசை மற்றும் உணவு ஆகியவற்றை நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் ரசிக்கலாம். இசை ஆர்வலர்களுக்கு நேரடி இசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூஃபி, பாலிவுட் ஹிட்ஸ் மற்றும் நாட்டுப்புற ட்யூன்கள் என அனைத்து வகைகளிலும் இசை கச்சேரிகள் நடைபெறுகிறது.

6 / 8

இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் உலகளாவிய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரங்களை பார்த்து மகிழலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரே இடத்தில் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை மட்டும் இன்றி 250 நாடுகளுக்கும்‌ மேற்பட்ட கலாச்சாரங்களை இங்கு நம்மால் பார்த்து மகிழ முடியும்.

7 / 8

நேரடி நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. மேலும் விதவிதமான ஆடைகள், ருசிகரமான உணவுகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒரே குறையின் கீழ் கொண்டு வருவது தான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம்.

8 / 8

TV9 இன் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா துர்கா பூஜை கொண்டாட்டங்களை அதன் பாரம்பரியம் மற்றும் பிரம்மாண்டத்துடன் டெல்லியில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் திருவிழா நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இம்முறையும் இந்த திருவிழா புதிய கோலாகலத்துடன் திரும்பி உள்ளது. திறமையான கலைஞர்களோடு இந்த திருவிழா ‌ வண்ணமயமான நாட்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version