துர்கா பூஜையின் இறுதி நாள் கொண்டாட்டம்… ஆரவாரத்துடன் விடை பெற்றார் துர்கா தேவி - Tamil News | TV9 festival of India last date vijaydashmi women celebrated occasion of godness Durga vermilion details in Tamil | TV9 Tamil

துர்கா பூஜையின் இறுதி நாள் கொண்டாட்டம்… ஆரவாரத்துடன் விடை பெற்றார் துர்கா தேவி

Published: 

14 Oct 2024 19:06 PM

Festival of India 2024: TV9 நெட்வொர்க் நடத்திய துர்கா பூஜை திருவிழாவின் நேற்று நிறைவடைந்தது.‌ கடைசி நாள் துர்கா தேவி மிகுந்த ஆரவாரத்துடன் பக்தர்களிடம் இருந்து விடை பெற்றார். இந்த நிகழ்வின் போது பெண்கள் ஒருவருக்கொருவர் சித்தூர் பூசி விளையாடினர். அக்டோபர் 9 முதல் அக்டோபர் 13 வரை நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

1 / 7டெல்லி

டெல்லி மேஜர் தியான் சந்த ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று பெண்கள் துர்கா தேவிக்கு செந்தூர் பூசி விடை கொடுத்தனர். அக்டோபர் 9 முதல் அக்டோபர் 13 வரை நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

2 / 7

இந்த திருவிழாவின் கடைசி நாளான இன்று விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது அன்னிக்கு பூரண சடங்குகளுடன் பிரியாவிடை கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று பாரம்பரிய பூஜையுடன் தொடங்கியது.

3 / 7

கடந்த ஆண்டு இந்த திருவிழா நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திருந்தது. கடந்த ஆண்டு போலவே இந்த முறையும்‌ TV9 நெட்வொர்க் ஏற்பாடு செய்திருந்த இந்த திருவிழா கோலாகலத்துடன் முடிவடைந்திருக்கிறது. இங்கு 250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் ஆப்கானிஸ்தான் கற்கள் முதல் ஈரானிய குங்குமப்பூ வரை அந்த ஸ்டால்களில் இடம் பெற்றிருந்தது.

4 / 7

கடந்த ஐந்து நாட்களாக துர்கா பூஜை மட்டுமின்றி பல்வேறு விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாண்டியா முதல் கர்பா வரை பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்ச்சிகளில் ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் டெல்லி சிறப்பு உணவு வகைகள், லக்னோ உணவுகள், பஞ்சாபி முதல் ராஜஸ்தானி உணவு வரை ஸ்டால்களில் இடம்பெற்று இருந்தது.

5 / 7

விழாவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிற புடவையில் காட்சியளித்தனர்.‌ பாரம்பரியத்தின் படி துர்கா தேவிக்கு அவர்கள் விடை கொடுத்து அனுப்பினர்.

6 / 7

இந்த விழாவில் டெல்லியில் வசிக்கும் வங்காளத்தைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் சிந்தூர் கேலாவில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் சிந்தூர் பூசி மகிழ்ந்தனர். இந்த திருவிழாவில் மக்களவை உறுப்பினர் உட்பட பல ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

7 / 7

இந்த திருவிழாவில் மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நாட்டுப்புற இசைகள் மட்டுமல்லாமல் ஏராளமான பாலிவுட் பாடல்களுக்கு பார்வையாளர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!