Two Wheeler: 6 மாதங்களில் ஒரு கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனை… என்னென்ன பிராண்டுகள்? - Tamil News | Two wheeler sales in India crosses 1 crore for third time in first half period details in Tamil | TV9 Tamil

Two Wheeler: 6 மாதங்களில் ஒரு கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனை… என்னென்ன பிராண்டுகள்?

Published: 

17 Oct 2024 19:07 PM

Two Wheeler Sales: ஏப்ரல் முதல் செப்டம்பர் 2024 வரையிலான ஆறு மாதங்களில் இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் ஆறு மாதங்களில் நடந்த மூன்றாவது அதிக இரு சக்கர வாகன விற்பனை இதுவாகும். 2018-19 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.15 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

1 / 6இந்தியாவில்

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனை மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் பாதியில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. கோவிட்க்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டுவது இதுவே முதல் முறை. 2017-18 முதல் பாதியில் 1.05 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் 1.15 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஒரு கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

2 / 6

இந்த ஆறு மாதங்களில் விற்பனையான 1.01 கோடி இரு சக்கர வாகனங்களில் பைக்குகள் 64 லட்சமும், ஸ்கூட்டர் சுமார் 35 லட்சமும், மொபெட்கள் 2.60 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.பைக்குகளில் ஹீரோ நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. 27 லட்சத்துக்கும் அதிகமான ஹீரோ பைக்குகள் விற்பனையாகியுள்ளன. ஹோண்டா, பஜாஜ் டாப்-3 இடங்களில் உள்ளன. ஸ்கூட்டர்களில் ஹோண்டா முன்னணியில் உள்ளது. டிவிஎஸ் மற்றும் சுஸுகி ஆகியவை அடுத்த இடத்தில் உள்ளன.

3 / 6

ஒட்டுமொத்த இரு சக்கர வாகன விற்பனையில் ஹீரோ மற்றும் ஹோண்டா இடையே அதிக இடைவெளி இல்லை. முன்னணி நிறுவனமான ஹோண்டாவிலிருந்து ஹீரோவுக்கு சில ஆயிரம் எண்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. டிவிஎஸ், பஜாஜ் மற்றும் சுஸுகி ஆகியவை டாப்-5ல் உள்ள மற்ற நிறுவனங்களாகும்.

4 / 6

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பைக்குகளின் மொத்த விற்பனை 64,07,887. ஹீரோ மோட்டோகார்ப்: 27,57,911 ஹோண்டா இந்தியா: 12,97,659 பஜாஜ் ஆட்டோ: 10,91,357 டிவிஎஸ் மோட்டார்: 6,27,028 ராயல் என்ஃபீல்டு: 4,10,843 யமஹா இந்தியா: 2,07,103 சுஸுகி மோட்டார் சைக்கிள்கள்: 11,249 பியாஜியோ: 2,071 கவாஸாகி: 2,012 டிரையம்ப் மோட்டார் சைக்கிள்கள்: 654

5 / 6

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஸ்கூட்டர்களின் மொத்த விற்பனை 34,97,300. ஹோண்டா இந்தியா: 15,83,760 டிவிஎஸ் மோட்டார்: 8,53,963 சுஸுகி மோட்டார் சைக்கிள்: 5,05,281 ஹீரோ மோட்டோகார்ப்: 1,82,755 யமஹா இந்தியா: 1,61,462 பஜாஜ் ஆட்டோ: 1,27,941 ஈதர் : 64,718 பியாஜியோ: 16,100 ஒகினாவா ஆட்டோடெக்: 1,320

6 / 6

முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு தனித்துவமான இருசக்கர நிறுவனம் ஆகும். இதுதான் இந்தியாவில் மிகப் பெரிய இரு சக்கர உற்பத்தி நிறுவனம். 2001 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியை செய்து வருகிறது. அதன் பிறகு உலகில் வேறு எந்த உற்பத்தியாளர்களும் அந்த நிலையை அடைய முடியவில்லை.

பான் இந்திய நடிகை இந்த குழந்தை...
நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரீலீஸ் தெரியுமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...