5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vastu Tips: சூரிய அஸ்தனமத்திற்கு பின் செய்யக்கூடாத விஷயங்கள்.. பண பிரச்னை உண்டாகும்!

Astrology: சாஸ்திரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யக்கூடாதவை என பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் பின்பற்றுவது மிகவும் முக்கியம். ஏனெனில் அவை நம் வாழ்வில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் அவர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என சொல்லப்படுகிறது.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 17 Nov 2024 14:39 PM
சூரியன் மறையும் நேரம் இருட்டின் தொடக்கமாக உள்ளதால், இது எதிர்மறையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இருளில் எதிர்மறை சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. இதனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நாம் சில விஷயங்களை நாம் செய்ய வேண்டாம் என சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.அதனைப் பற்றி காணலாம்.

1 / 8
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டை துடைக்கவோ அல்லது சுத்தம் செய்யவோ கூடாது. இவ்வாறு செய்வதால் பணச் சிக்கல்கள் ஏற்படும் என்பது எச்சரிக்கப்படுகிறது. மாலையில் துடைப்பம் வைத்து சுத்தம் செய்யும் வீட்டில் லட்சுமி தேவி குடியிருப்பதில்லை என நம்பப்படுகிறது.

2 / 8
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டின் பிரதான கதவை மூடி வைக்க வேண்டாம். மத நம்பிக்கையின்படி, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்கள் மாலையில் வருவதாக சொல்லப்படுகிறது.மேலும் மாலையில் வீட்டின் பிரதான வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். அதனால் வீட்டில் இருள் இருக்காது.

3 / 8
மாலையில் வீட்டில் யாரும் தூங்கக்கூடாது. மாலையில் தூங்குவது மிக மோசமான செயலாகும். அந்த வீட்டில் லட்சுமி தேவி வசிக்கவில்லை என்று அர்த்தமாகும். சூரிய அஸ்தமனத்தின் போது வீட்டில் தூங்குவது முன்னேற்றத்தை ஏற்படுத்தாது என கணிக்கப்பட்டுள்ளது.

4 / 8
மாலையில் துளசி இலைகள் மட்டுமல்லாது எந்த தாவரங்களிலும் பூக்கள், இலைகள் என எதையும் பறிக்கக் கூடாது. இப்படி செய்வதால் லட்சுமி தேவிக்கு கோபம் வர வாய்ப்புள்ளது. இதனால் வீட்டில் வறுமை ஏற்படும். மாலையில் துளசி பூஜை செய்து தீபம் ஏற்றினால் நல்லது.

5 / 8
தயிர், உப்பு, மஞ்சள், பணம் போன்றவற்றை மாலையில் தவறுதலாகக் கூட தானம் கொடுக்க வேண்டாம்.  ஒருவேளை கண்டிப்பாக கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் நல்ல நேரத்தில் மட்டுமே கொடுத்து, பெற வேண்டும்.

6 / 8
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு துணிகளை துவைப்பது அல்லது சுத்தம் செய்வது மிகவும் அசுத்தமாக கருதப்படுகிறது. இப்படிச் செய்வதால் பணச் சிக்கலில் சிக்குவதுடன் நிதிநிலையும் பாதிக்கப்படும்.

7 / 8
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு முடி அல்லது நகங்களை வெட்ட வேண்டாம். இதை வாஸ்து படி செய்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எனவே இவற்றை முடிந்தவரை செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் தவிர்ப்பது நல்லது. (Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

8 / 8
Latest Stories