வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - Tamil News | very heavy rainfall expected in delta districts tanjore tiruvarur nagapattinam | TV9 Tamil

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Published: 

25 Nov 2024 06:51 AM

TN Rain Alert: சென்னையில் கடந்த ஒரு வார காலமாக மழை இல்லாமல் பனி கொட்டி வரும் நிலையில் நவம்பர் 28 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

1 / 6கிழக்கு

கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (நவம்பர் 24) அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது.இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 25) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறுகிறது.

2 / 6

இதனையடுத்து அடுத்த 2 நாட்கள் இது வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

3 / 6

குறிப்பாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 / 6

அதேசமயம் நாளை (நவம்பர் 26) கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம்,திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

5 / 6

சென்னையில் கடந்த ஒரு வார காலமாக மழை இல்லாமல் பனி கொட்டி வரும் நிலையில் நவம்பர் 28 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

6 / 6

சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். சில இடங்களில் சாரல் மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!
கிராமத்து லுக்கில் நடிகை அதிதி ஷங்கர்!
நடிகை ஷ்ரத்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!