Virat Kohli: சர்ரென சரிந்த விராட் கோலி.. ஷாக் கொடுத்த ஃபேப்-4 பட்டியல்.. டாப் 3 யார் தெரியுமா? - Tamil News | virat kohli left behind in fab 4 list | TV9 Tamil

Virat Kohli: சர்ரென சரிந்த விராட் கோலி.. ஷாக் கொடுத்த ஃபேப்-4 பட்டியல்.. டாப் 3 யார் தெரியுமா?

Updated On: 

23 Jul 2024 16:27 PM

Joe Root: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் ஜோ ரூட் இதுவரை 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 260 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரூட், 32 சதங்கள், 62 அரைசதங்கள் அடித்துள்ளார். சமீபத்தில், நாட்டிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் அபார சதம் அடித்து, 32வது சதத்தை பதிவு செய்தார்.

1 / 7நாட்டிங்ஹாமில்

நாட்டிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் அபார சதம் அடித்தார். இந்த ஆட்டத்தின் 2வது இன்னிங்சில் ரூட் 178 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். இந்த சதத்தின் மூலம் ஜோ ரூட் தனது டெஸ்ட் சதங்களின் எண்ணிக்கையை 32 ஆக உயர்த்தினார்.

2 / 7

இதன் மூலம், ஃபேப்-4 பேட்டர்களின் பட்டியலில் அதிக சதம் அடித்தவர்களில் முதலிடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஃபேப்-4 என்பது ஃபேபுலஸ் ஃபோர் ஆகும். சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலையே ஃபேப்-4 என்று குறிப்பிடப்படும்

3 / 7

2021 வரை, பேப்-4 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன் கோலிதான். தற்போது கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோர் முதல் மூன்று இடங்களிலும், கோலி 4வது இடத்திலும் உள்ளனர்.

4 / 7

கேன் வில்லியம்சன்: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 176 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கேன், 32 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஃபேப்-4 பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

5 / 7

ஸ்டீவ் ஸ்மித்: ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஸ்டீவ் ஸ்மித் 109 டெஸ்ட் போட்டிகளில் 195 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்தார். இதில் 32 சதங்களும், 41 அரைசதங்களை அடித்துள்ளார்.

6 / 7

ஜோ ரூட்: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் ஜோ ரூட் இதுவரை 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 260 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரூட், 32 சதங்கள், 62 அரைசதங்கள் அடித்துள்ளார்.

7 / 7

விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 191 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள கோலி, 29 சதங்கள், 30 அரைசதங்கள் அடித்து பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version