5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெள்ளக்காடாக மாறிய சென்னை.. பரிதவிக்கும் மக்கள்.. தீர்வு எப்போது?

Chennai Rains: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய சாலைகளில், தெருக்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Nov 2024 18:04 PM
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மற்றும் அதனை  ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மத்தியல் அச்சம் உணர்வு ஏற்படும்.  குறிப்பாக 1 கோடி மக்கள் வாழும் சென்னை மழை காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.  வடகிழக்கு பருவமழை காலங்களில் மழையால் சென்னை தத்தளிக்கும். இதற்கு அரசு பல்வேவறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குவது வழக்கமாகிவிட்டது.

1 / 5
குறிப்பாக, வட சென்னை, தென் சென்னை பகுதிகள் ஆண்டுதோறும் கடுமையாக  பாதிக்கப்படுகிறது.  இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனவும் சென்னை மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், ஆண்டுதோறும் பெய்யும் மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக மழையே சென்னை வெள்ள பாதிப்புக்கு மிக முக்கியம் காரணம் என்று கூறப்படுகிறது.

2 / 5
ஒருநாள் கனமழை பெய்துவிட்டாலே சென்னையில் படகில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.  இதற்கு காரணம் வடிகால் முறையாக இல்லாததால் மழைநீர் வீடுகளிலும், சாலைகளிலும் சூழ்கிறது என்கின்றனர் மக்கள்.  கடந்தாண்டு  மிக்ஜாம் புயலால் சென்னை நகரமே தத்தளித்தது. இதனால் சென்னை மக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னையை தற்போது ஃபெங்கல் புயல் ஆட்டம் காட்டி வருகிறது.

3 / 5
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.  சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய சாலைகளில், தெருக்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை நகரம் மட்டுமில்லாமல் புறநகரிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.திருநின்றவூர்- திருவள்ளுர் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட பகுதிகிளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர் பகுதிகளில் பல தெருக்களில் வெள்ளம் வடியாத நிலையில் உள்ளன.

4 / 5
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.  அய்யப்பன்தாங்கல் முதல் காட்டுப்பாக்கம் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சேப்பாக்கம் வாலாஜா சாலையில் வெள்ளம் பெருக்கெடுக்கு ஓடுகிறது. வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. எனவே, சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில்,   மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

5 / 5
Latest Stories