சாக்ஸ் அணிவதில் கவனம்.. நிபுணர்கள் எச்சரிப்பது என்ன? - Tamil News | Wearing socks while sleeping shows a bad impact on health details in Tamil | TV9 Tamil

சாக்ஸ் அணிவதில் கவனம்.. நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?

Published: 

13 Nov 2024 09:33 AM

Sleep with Socks: மழைக்காலம் தொடங்கி விட்டதால் குளிரை மக்கள் பல வகைகளில் சமாளித்து வருகிறார்கள். மாலை நேரம் தொடங்கியதும் குளிரின் தீவிரம் இதனால் மக்கள் போர்வை போன்றவற்றை பயன்படுத்தி குளிரை சமாளித்து வருகின்றனர். இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருப்பதால் கால்களில் கால் உறை அணிந்து தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இரவு முழுவதும் காலுறையுடன் தூங்கினால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

1 / 5இரவு

இரவு முழுவதும் சாக்ஸ் போட்டு உறங்குவதால் கால்களில் வேர்வை சேரும். எனவே இது புஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது சருமத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் எனவும் கூறப்படுகிறது. சாக்ஸ் அணிந்து இரவு முழுவதும் தூங்குவதால் கால் வலி ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக உங்கள் கால்களில் ஏற்கனவே வேறு பிரச்சனைகள் இருந்தால் அது இன்னும் மோசமாகிவிடும்.

2 / 5

இரவு முழுவதும் சாக்ஸ் அணிவதால் பாக்டீரியா தொற்று ஏற்படலாம். கால்களில் ஏற்படும் பிரச்சனைகளால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்ந்த காலநிலையில் கால் உறைகளை அணிவதால் அரிப்பு, தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

3 / 5

இரவு முழுவதும் சாக்ஸ் அணிந்து தூங்குவது தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மிகவும் இறுக்கமான கால் உறைகளை அணிவதால் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும்.‌

4 / 5

இறுக்கமான கால் உறை அணிந்து தூங்குவதால் ரத்த ஓட்டம் தடைபடும் இதனால் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

5 / 5

இரவில் சாக்ஸ் அணிய வேண்டும் என்றால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கம்பளி சாக்ஸ்க்கு பதிலாக பருத்தி சாக்ஸ் அணியலாம். இதனால் பாதிப்பு சற்று குறையும். இறுக்கமான கால் உறைகளை தவிர்க்க வேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு கால்களை தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு சுத்தமான சாக்ஸை அணிந்து கொள்ள வேண்டும்

பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்