Weight Gain Foods: ஒல்லியாவே இருக்கிற நீங்க சீக்கிரம் எடை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க.. - Tamil News | weight gaining foods in tamil | TV9 Tamil

Weight Gain Foods: ஒல்லியாவே இருக்கிற நீங்க சீக்கிரம் எடை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க..

Published: 

31 Jul 2024 11:27 AM

நம்மில் பெரும்பாலானோர் என்ன தான் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். 'நீ மட்டும் எப்படி ஒல்லியாகவே இருக்க?' எனக்கும் டிப்ஸ் சொல்லு என்று பலரும் கேட்பார்கள். ஆனால், அவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்னென்னமோ முயற்சி செய்திருப்பார்கள். இருப்பினும், சில உணவுகளின் மூலமே உடல் எடையை வெகு சீக்கரமாகவே அதிகரிக்கலாம். இந்த பதிவில் உடல் எடையை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

1 / 7கொழுப்பு

கொழுப்பு நிறைந்த பால்: எடை அதிகரிக்க விரும்புவோர், தினமும் இரண்டு வேளை கொழுப்பு நிறைந்த பால் குடிக்கலாம். இதிலுள்ள தாதுக்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் இயற்கையாக எடை அதிகரிப்பை தூண்டக்கூடியது.

2 / 7

வாழைப்பழம்: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் சீக்கிரமே உடல் எடையை அதிகரித்துவிடலாம். மேலும், இதில் உள்ள கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. நமது ஊட்டச்சத்து தேவைகளை ஈடுசெய்கிறது.

3 / 7

உலர்ந்த பழங்கள்: உலர்ந்த பழங்கள் என்றாலே ஆரோக்கியத்தின் களஞ்சியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். எனவே, தினமும் 1 உலர்ந்த பழங்களை ஊற வைத்தோ அல்லது வெறுமன் வறுத்தோ சேர்த்துக் கொள்ளுங்கள். சீக்கிரமே வெயிட் போடும்.

4 / 7

முட்டை: முட்டையில் புரதச்சத்து ஏராளமாக இருக்கிறது. எனவே, தினமும் 1 முட்டையை சாப்பிட முயற்சியுங்கள். இதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். உடல் எடையும் சீக்கிரம் அதிகரிக்கும்.

5 / 7

பேரீச்சம் பழம்: பேரீச்சம் பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம். குறிப்பாக, இரும்புச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது. இது இரத்த சோகையை தடுக்கிறது. தினமும் 2-3 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்

6 / 7

இறைச்சி மற்றும் மீன்கள்: வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது மீன்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் உடல் எடையை இயற்கையாக அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இறைச்சியில் உள்ள புரதம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், கலோரி போன்றவை தசை வெகுஜனத்தை உருவாக்கவும், எடையை அதிகரிக்கவும் உதவுகின்றன.

7 / 7

அவகேடோ பழம்: உடல் எடையை அதிகரிக்கும் ஏராளமான சத்துக்கள் இந்த அவகேடோ பழத்தில் உள்ளது. எனவே, தினமும் ஒரு நன்றாக பழுத்த அவகேடோ பழத்தை ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். மிகவும் குறைந்த காலத்தில் எடையை அதிகரிக்க வேண்டுமென்று நினைப்போருக்கு பெஸ்ட் சாய்ஸ்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!