Weight Loss Tips: சோறு அல்லது சப்பாத்தி.. 7 நாட்களில் எது உடல் எடையை குறைக்கும்..? - Tamil News | Weight Loss Tips: chapati or rice which one is healthier to loose weight in tamil | TV9 Tamil

Weight Loss Tips: சோறு அல்லது சப்பாத்தி.. 7 நாட்களில் எது உடல் எடையை குறைக்கும்..?

Published: 

12 Nov 2024 21:34 PM

Health Tips: சோறு மற்றும் சப்பாத்தி இரண்டும் வெவ்வேறு ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன. சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். சப்பாத்தி சாப்பிட்டால் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற எண்ணம் சரியல்ல. இரண்டையும் தந்திரமாக சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்.

1 / 6உடல்

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க தினசரி உணவில் டயட் என்னும் திட்டத்தை மேற்கொள்கின்றனர். இதனால், பெரும்பாலான மக்கள் சாதத்தை தவிர்த்து சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளுக்கு மாறுகின்றன. உண்மையில், சாதம் உடல் எடையை அதிகரிக்க செய்யுமா, சப்பாத்தி உடல் எடையை குறைக்க செய்யுமா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

2 / 6

சோறு மற்றும் சப்பாத்தி இரண்டும் வெவ்வேறு ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன. சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். சப்பாத்தி சாப்பிட்டால் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற எண்ணம் சரியல்ல. இரண்டையும் தந்திரமாக சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்.

3 / 6

வாரம் முழுவதும் சிலர் சப்பாத்தி சாப்பிட்டு டயட்டில் இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் டயட்டில் இருந்து விடுமுறை அளித்து சோறு உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு சீட் டேட் என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது தவறு. உடலில் போதுமான ஆற்றல் கிடைக்க வாரத்தில் நான்கு நாட்கள் சப்பாத்தி சாப்பிடுவதும், இரண்டு நாட்கள் சோறு சாப்பிடுவதும் முக்கியம்.

4 / 6

சப்பாத்தி சாப்பிடுவதும் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்க செய்யும். எனவே, கோதுமைக்கு பதிலாக ராகி, சோளம் போன்ற தானியங்களால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிடுங்கள். இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.

5 / 6

இந்த வகை தானியங்களில் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இதனால், உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவும் செய்யாது. அதேபோல், உடல் எடையை குறைக்க உணவில் சோற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

6 / 6

ஆனால், வெள்ளை சோறு சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க செய்யும் அபாயம் உள்ளது. எனவே, பழுப்பு அரிசி சாப்பிடுவது நல்லது. இது உடல் எடையை குறைக்க செய்யும். சப்பாத்தியில் பசையம் உள்ளது. ஆனால், பழுப்பு அரிசியில் பசையம் இல்லை. இது, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.

சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்
இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய சில டிப்ஸ்!