Tamarind Benefits: ஆரோக்கிய குணங்களின் பொக்கிஷம் புளி.. இதை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? - Tamil News | What are the 6 benefits of tamarind; health tips in tamil | TV9 Tamil

Tamarind Benefits: ஆரோக்கிய குணங்களின் பொக்கிஷம் புளி.. இதை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

Published: 

06 Oct 2024 15:44 PM

Health Benefits: புளியில் பொட்டாசியமும்,, மெக்னீசியமும் அதிக அளவில் உள்ளது. இவை நம் உடலில் இரத்த அழுத்தத்தை பராமரிக்க பெரிதும் உதவும். இது தவிர, புளியில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிஃபீனால்களும் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்க, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். புளியை உட்கொள்வது இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

1 / 6புளி

புளி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சிறுவயதில் நமக்கு இது பல நல்ல நினைவுகளை நிச்சயம் தந்திருக்கும். புளியானது சாப்பிட சுவையாக இருப்பது மட்டுமின்றி, உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அந்தவகையில் புளி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளவும்.

2 / 6

புளியில் அதிக அளவு உள்ள ஆன்டி - ஆக்ஸ்டன்ட்கள் புற்றுநோயை தடுக்கும் திறன் கொண்டவை. ஆன்டி - ஆக்ஸ்டன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. இது உங்கள் செல்களில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. புற்றுநோயைத் தடுக்க, செல்கள் சேதமடைவதைத் தடுக்க புளி பெரிதும் உதவுகிறது.

3 / 6

புளியில் பொட்டாசியமும்,, மெக்னீசியமும் அதிக அளவில் உள்ளது. இவை நம் உடலில் இரத்த அழுத்தத்தை பராமரிக்க பெரிதும் உதவும். இது தவிர, புளியில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிஃபீனால்களும் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது .

4 / 6

இதயம் ஆரோக்கியமாக இருக்க, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். புளியை உட்கொள்வது இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் புளியில் இதுபோன்ற பல பண்புகள் உள்ளன.

5 / 6

புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின்கள் சி மற்றும் ஏ போன்ற தாதுக்கள் உள்ளன. புளியை தினமும் உட்கொள்வது சருமத்தை ஆரோக்கியமாகவும், ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கவும் உதவும். புளியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.

6 / 6

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் பல பண்புகள் புளியில் உள்ளன. புளியில் உள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள், கரோட்டின் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.

Follow Us On
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
Exit mobile version