Green Apple Benefits: பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? தெரிஞ்சுகோங்க..! - Tamil News | What are the benefits of eating green apples; health tips in tamil | TV9 Tamil

Green Apple Benefits: பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? தெரிஞ்சுகோங்க..!

Published: 

07 Oct 2024 21:28 PM

Green Apple: பச்சை ஆப்பிளில் உள்ள உள்ள பாலிபினால்கள் உடல் பருமனுக்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன. இது, உடலில் உள்ள கொழுப்பு திசுக்களைக் குறைப்பதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பச்சை ஆப்பிள் உங்கள் உடலுக்கு மட்டுமல்லாது, சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

1 / 6பச்சை

பச்சை ஆப்பிளில் பல வகையான பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அதில், முக்கியமான ஒன்று குவெர்ஸ்டீன். இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றமாகும், இது கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் தோலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கல்லீரலை புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவி செய்கிறது.

2 / 6

பச்சை ஆப்பிளில் கால்சியம், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற பண்புகள் அதிகளவில் உள்ளன. இது, எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதோடு, எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

3 / 6

பச்சை ஆப்பிள் சாப்பிடுவது வயிற்றுக்கு பல வகைகளில் நன்மை தரும். பச்சை ஆப்பிளில் பெக்டின் என்ற ஒரு பொருள் உள்ளது. இது புரோபயாடிக் ஆக செயல்பட்டு வயிறு மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

4 / 6

பச்சை ஆப்பிளில் உள்ள உள்ள பாலிபினால்கள் உடல் பருமனுக்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன. இது, உடலில் உள்ள கொழுப்பு திசுக்களைக் குறைப்பதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

5 / 6

பச்சை ஆப்பிள் உங்கள் உடலுக்கு மட்டுமல்லாது, சருமத்திற்கும் நன்மை பயக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஏ உங்கள் சருமத்தின் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவி செய்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

6 / 6

பச்சை ஆப்பிள் இதயத்தை பாதுகாக்கிறது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பாதியாக குறைக்கிறது. பச்சை ஆப்பிள்களை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கலாம்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?