Health Tips: இளம் வயதிலேயே அடிக்கடி மூட்டு வலி தொல்லையா..? இதுவே முக்கிய காரணம்..! - Tamil News | What are the causes of joint pain at a young age; health tips in tamil | TV9 Tamil

Health Tips: இளம் வயதிலேயே அடிக்கடி மூட்டு வலி தொல்லையா..? இதுவே முக்கிய காரணம்..!

Published: 

14 Nov 2024 21:34 PM

Bone Strength: மணிக்கணக்கில் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வதால் தோள்பட்டை மூட்டுகள், முழங்கால்கள், கழுத்து மற்றும் முதுகு தசைகளில் வலி ஏற்படும். இது கால் மூட்டுகளில் அழுத்தத்தை கொடுத்து மூட்டு வலியை உண்டாக்கும். எனவே, குறைந்தபட்சம் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நடப்பது நல்லது.

1 / 6மூட்டு

மூட்டு வலி என்பது பெரும்பாலும் வயதானவர்களுக்கே அதிகம் வந்தது. தற்போதைய நவீன வாழ்க்கையில் மூட்டு வலியானது இளைஞர்களிடமும் அதிகம் வர தொடங்கிவிட்டது. இதற்கு, எலும்புகள் பலவீனமடைதல், அதிகரித்த யூரிக் அமிலம் போன்றவையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

2 / 6

வைட்டமின் டி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உடலில் எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஊட்டச்சத்துக்கள். இந்த ஊட்டச்சத்தை அளிக்கும் உணவுகளை நீங்கள் உட்கொள்ளவில்லை என்றால், கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழந்து, சிறு வயதிலேயே மூட்டுவலி பாதிப்பு ஏற்படும்.

3 / 6

மணிக்கணக்கில் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வதால் தோள்பட்டை மூட்டுகள், முழங்கால்கள், கழுத்து மற்றும் முதுகு தசைகளில் வலி ஏற்படும். இது கால் மூட்டுகளில் அழுத்தத்தை கொடுத்து மூட்டு வலியை உண்டாக்கும். எனவே, குறைந்தபட்சம் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நடப்பது நல்லது.

4 / 6

உடல் பருமன் சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மூட்டுகளில் கூடுதல் அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உங்களுக்கு வலி பிரச்சனை ஏற்படலாம்.

5 / 6

உடலுக்கு வேலை கொடுக்காததும், உடலுக்கு தேவையான இயக்கம் கிடைக்காததும் மூட்டு வலி மற்றும் தசை விறைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்து மூட்டு வலி பிரச்சனையை ஏற்படும். யோகா, ஓட்டம், ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், லைட் ஸ்ட்ரெச்சிங் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

6 / 6

உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிப்பது மற்றும் அதன் அறிகுறிகளை கவனிக்காமல் இருப்பது போன்றவை. இது மூட்டுவலியாக மாறலாம். இதன் காரணமாக சிறு வயதிலேயே மூட்டு வலி பிரச்சனை வரலாம். உடலுக்குத் தேவையான புரதத்தை உட்கொள்ளும்போது சரி செய்யப்படும்.

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ