உடலில் தேங்காய் எண்ணெயை தடவுவதால் இவ்வளவு நன்மைகளா? - Tamil News | what happens if you apply coconut oil on your feet details in tamil | TV9 Tamil

உடலில் தேங்காய் எண்ணெயை தடவுவதால் இவ்வளவு நன்மைகளா?

Published: 

04 Dec 2024 19:37 PM

Benefits of Coconut Oil: குளிர்காலத்தில் அதிக சரும பிரச்சனை ஏற்படும். சரும பிரச்சனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேங்காய் எண்ணெயை உடம்பில் தடவலாம். தேங்காய் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் தடவினால் பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் ‌

1 / 5கோடை காலம் மற்றும் மழைக்காலத்தை விட குளிர் காலத்தில் சரும பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். எனவே இந்த நேரத்தில் கவனமாக நமது சருமத்தை பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமன்றி இந்த காலங்களில் பருவ கால நோய்களும் அதிகமாக ஏற்படும். எனவே மூட்டு வலி முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கோடை காலம் மற்றும் மழைக்காலத்தை விட குளிர் காலத்தில் சரும பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். எனவே இந்த நேரத்தில் கவனமாக நமது சருமத்தை பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமன்றி இந்த காலங்களில் பருவ கால நோய்களும் அதிகமாக ஏற்படும். எனவே மூட்டு வலி முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

2 / 5

சளி காரணமாக உடல் வலியும் அதிகரிக்கும். எனவே இந்த சீசனில் இரவில் தேங்காய் எண்ணெயை கால்களில் தடவி வந்தால் இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இரவில் எண்ணெய் தேய்த்து தூங்குவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

3 / 5

தோல் மற்றும் உடல் நலம் தொடர்பான பல பிரச்சனைகளை குறைக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் பயன்படுகிறது. தசை பிடிப்பில் இருந்து நிவாரணம் பெற இது உதவுகிறது. இரவில் கால்களில் எண்ணெய் தடவி வந்தால் தசை வலி போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

4 / 5

அது மட்டுமல்லாமல் கால்களுக்கு எண்ணெய் தடவுவதால் சருமம் மிகவும் பல ஆரோக்கியமாக இருக்கும். கால் விரல்கள் மற்றும் நகங்கள் ஈரப்பதமாகவும் பளபளப்பாகவும் மாறும். தோல் மென்மையாக மாறுவதோடு பாதங்களில் வெடிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

5 / 5

இரவில் கால்களுக்கு எண்ணெய் தடவுவதன் மூலமும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். தூக்கமும் நன்றாக இருக்கும். வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது. தசைகளை தளர்த்தும்

நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
இந்தியர்களுக்கு துபாய் பிடிக்க என்ன காரணம்?
குற்ற உணர்ச்சியாக இருக்கா? - இதை படிங்க!
வேர்க்கடலையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்