Thin skin: வயதான காலத்தில் தோல் சுருங்கி போவதற்கான காரணம் என்ன..? - Tamil News | What is the cause of skin thinning in old age; lifestyle tips in tamil | TV9 Tamil

Thin skin: வயதான காலத்தில் தோல் சுருங்கி போவதற்கான காரணம் என்ன..?

Published: 

02 Dec 2024 14:26 PM

Skin Shrinkage: வயது ஏற ஏற, சருமத்தில் ஈரப்பதம் குறைய தொடங்கும். இதனால், சருமத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் பலவீனமாகி, சருமம் வறண்டு போகும். இதையடுத்து, சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல், அது விரைவில் மெல்லியதாகவும், சுருக்கமாகவும் தோன்ற ஆரம்பிக்கும்.

1 / 5வயதிற்கு ஏற்ப நம்முடைய தோல் மாற்றமடையும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், இது ஏன் நடக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா..? இந்த கேள்விக்கான பதிலை இங்கே தெரிந்து கொள்வோம்.

வயதிற்கு ஏற்ப நம்முடைய தோல் மாற்றமடையும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், இது ஏன் நடக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா..? இந்த கேள்விக்கான பதிலை இங்கே தெரிந்து கொள்வோம்.

2 / 5

கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவை சருமத்தின் வலிமை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கும் இரண்டு முக்கியமான புரதங்கள் ஆகும். இது வயதாகும்போது இந்த இரண்டு புரதங்களின் அளவு குறைய தொடங்கும். கொலாஜன் சருமத்தை பலப்படுத்தும், எலாஸ்டின் அதை நெகிழ்வுதன்மையுடன் இருக்கும். இந்த இரண்டு புரதங்களின் குறைபாடு தோல் மெல்லியதாகவும், தளர்வாகவும் மாறும்.

3 / 5

வயது ஏற ஏற, சருமத்தில் ஈரப்பதம் குறைய தொடங்கும். இதனால், சருமத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் பலவீனமாகி, சருமம் வறண்டு போகும். இதையடுத்து, சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல், அது விரைவில் மெல்லியதாகவும், சுருக்கமாகவும் தோன்ற ஆரம்பிக்கும்.

4 / 5

நாம் வயதாகும்போது, ​​​​நம் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறையத் தொடங்குகிறது, இது சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதன் காரணமாக சருமத்தில் ஈரப்பதம் குறைவதோடு, மெல்லியதாகவும், சுருங்கியும் இருக்கும்.

5 / 5

மேலும், சூரியனிடம் இருந்து வெளிப்படும் சூரிய கதிர்கள், தவறான உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் தசைகளில் பலவீனம் ஆகியவை சருமத்தை மெலிதாக மாற்றும். இதனால், சருமம் விரைவில் சுருங்க ஆரம்பித்து வயதான தோற்றத்தை கொடுக்கும்.

குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?
40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?