Health Tips: சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுகிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்! - Tamil News | What is the reason for pain while urinating details in Tamil | TV9 Tamil

Health Tips: சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுகிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்!

Published: 

30 Nov 2024 22:23 PM

Pain While Urinate: சிறுநீர் கழிக்கும் போது பலருக்கும் வலி ஏற்படுகிறது. ஆனால் இந்த பிரச்சனைக்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுநீர் கழிக்கும் போது ஏன் வலி ஏற்படுகிறது? எப்பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5சில சமயங்களில் சிறுநீர் கழிக்கும் போது ஒருவித வலியை உணர்கிறோம். பலரும் இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படுவதுண்டு. இது மருத்துவத்தில் டைசூரியா என்று அழைக்கப்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி பொதுவாக சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படுகிறது.

சில சமயங்களில் சிறுநீர் கழிக்கும் போது ஒருவித வலியை உணர்கிறோம். பலரும் இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படுவதுண்டு. இது மருத்துவத்தில் டைசூரியா என்று அழைக்கப்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி பொதுவாக சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படுகிறது.

2 / 5

Ecoli பாக்டீரியா சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை உண்டாக்கும். மேலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர் துர்நாற்றம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சிறுநீர்ப்பையில் ஏற்படும் எரிச்சல் காரணமாக சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். குறிப்பாக குளிக்கும்போது பயன்படுத்தும் சோப்புகளால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

3 / 5

சிறுநீரக கற்களும் வலியை ஏற்படுத்தும். குறிப்பாக சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் குழாய் வழியாக கற்கள் செல்லும்போது கடுமையான வலி சில சமயங்களில் சிறுநீரில் ரத்தமும் காணப்படுகிறது.

4 / 5

கோனோரியா அல்லது கிளமிடியா போன்ற பாலியல் தொடர்பான பிரச்சனைகளாலும் சிறுநீரில் ரத்தம் வரலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படும். சிறுநீர் குழாய் அழற்சியின் காரணமாகவும் வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

5 / 5

ஆண்களில் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் சிறுநீர் கழிக்கும் போது அல்லது அதற்குப் பிறகு வலிக்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட் தொற்று அல்லது பாக்டீரியா வஜினோசிஸ் போன்ற பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளும் சிறுநீர் கழிக்கும் போது வலியை ஏற்படுத்தும். பலவீனமான தசைகள் சிறுநீர் கழிக்கும் போது வலியை ஏற்படுத்தும்

தலைமுடி அடர்த்தியாக இவற்றை ஃபாலோ பண்ணுங்க!
பூண்டில் நெய் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
தினம் ஒரு நெல்லிகாய் சாப்பிட்டால் என்னாகும்?
குழந்தைகள் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?