Diwali: தீபாவளி தினத்தன்று வீட்டில் இருக்கவே கூடாத சில பொருட்கள்! - Tamil News | what to do to keep negative energy away from home on Diwali day details in tamil | TV9 Tamil

Diwali: தீபாவளி தினத்தன்று வீட்டில் இருக்கவே கூடாத சில பொருட்கள்!

Updated On: 

29 Oct 2024 09:03 AM

Deepavali Vastu Tips: வாஸ்துக்களின் படி, சில விதிகளை பின்பற்றினால் மட்டுமே லட்சுமிதேவி வீட்டில் இருக்கும் நுழைவார். இந்து மதத்தைப் பொறுத்தவரை அனைத்து காரியங்களும் நல்ல நேரம் பார்த்தே நடைபெறும். அதேபோல் வாஸ்த்துக்கள், விதிகளின்படியே அனைவரும் பின்பற்றி வாழ்கிறார்கள். அதின் அடிப்படையில் தீபாவளிக்கு முன் வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை அகற்றினால் உங்களின் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருகிறாள். இதனால் வாழ்க்கையில் பண கஷ்டங்கள் நீங்கும். அபரிதமான செல்வம் பெருகும்.

1 / 5இந்தியா

இந்தியா முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். இந்த தினத்தில் லட்சுமி தேவியை வீட்டிற்கு வரவேற்க சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நமது பூஜையை ஏற்று‌ லட்சுமி தேவி நமது இல்லங்களுக்கு வரவேண்டும் என்றால் வீட்டில் இருக்கக்கூடிய இந்த பொருட்களை அகற்ற வேண்டும். அப்படி இந்த பொருட்களை அகற்றினால் லட்சுமிதேவி நம்முடைய வீட்டில் வாசம் செய்வான். தீபாவளிக்கு முன் என்னென்ன பொருட்களை அகற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2 / 5

தீபாவளியின் போது வீட்டை சுத்தம் செய்வதில் சிறப்பு கவனம் செய்ய வேண்டும். வீடு அசுத்தமாக இருந்தால் லட்சுமி தேவி அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார். அழுக்கு நிறைந்த இடங்களில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள். எனவே தூய்மையில் கவனம் செலுத்துங்கள். தீபாவளி வருவதற்கு முன் தங்களின் இல்லங்களை சுத்தப்படுத்துங்கள்.

3 / 5

வீட்டில் உடைந்த கண்ணாடியை வைக்க வேண்டாம்.. வாஸ்து சாஸ்திரங்களின் படி உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சக்தியை கொண்டு வருகிறது. எனவே உடைந்த கண்ணாடியை அகற்றவும். உடைந்த கடிகாரம் இருந்தால் அதையும் மாற்ற வேண்டும். வீட்டில் எங்கேயாவது ஜன்னல், மேஜை, அல்லது விளக்கு போன்றவற்றில் இருக்கும் கண்ணாடி உடைந்து இருந்தாலும் அவற்றையும் மாற்ற வேண்டும்.

4 / 5

இல்லங்களில் உடைந்த கடவுளின் சிலைகள் இருந்தால் அவற்றை தீபாவளிக்கும் முன் மாற்றி விடுங்கள். அவற்றை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள குளத்தில் அபிஷேகம் செய்யலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி உடைந்து சிலைகள் வீட்டில் வைப்பது அபசகுணமாக கருதப்படுகிறது.

5 / 5

அலமாரியில் பழைய, கிழிந்த காலணிகள் இருந்தால், தீபாவளிக்கு முன் வீட்டை சுத்தம் செய்யும் போது அவற்றை வெளியே எறிய‌ வேண்டும். இது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை உருவாக்குகின்றது. எனவே உங்களிடம் கிழிந்த காலணி இருந்தால் எதிர்மறை ஆற்றலை தவிர்க்க தீபாவளிக்கு முன் அவற்றை வீட்டிலிருந்து ஆற்றவும்

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!